பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/122

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
119

ஆங்கிலேயர் கல்வி பெறுவதற்காக அமைக்கப்பெற்ற. கல்லூரி ஒன்றினைப்பற்றி முதலில் (The College of Fort St. George) கண்டோம். அதைத் தமிழில் ‘சென்னைக் கல்விச் சங்கம்’ என்ற பெயரிட்டு அழைத்தனர். அது 1812இல் தொடங்கப்பெற்று, 1854 வரை பணிபுரிந்தது. அதன் வழியாகவும் பல நல்ல தமிழ் உரைநடை நூல்கள் நாட்டு மக்களுக்காகவும்-சிறப்பாக ஆங்கில நாட்டிலிருந்து இங்கு வந்து பணி புரிந்தவர்களுக்காகவும் அச்சிடப் பெற்றன எனக் காண முடிகின்றது. பஞ்ச தந்திரக் கதை (1826), கதா மஞ்சரி (1826), மிருதி சந்திரிகை (1826), தமிழ் அரிச்சுவடி (1827) ஆகியவை அவற்றுள் சில. 'சென்னை செந்தமிழ் உரை சங்கம்’ எனவும் ஒரு சங்கம் இருந்து உரைநடையை வளர்த்தமை காண்கிறோம்.

தன் முயற்சி என்ற நூல் ‘ஸாமியுயல் ஸ்மைல்ஸ்’ என்பார் ஆங்கிலத்தில் எழுதியதன் மொழிபெயர்ப்பு நூலாகத் தமிழில் (1882) வந்துள்ளது. நாடு உண்மையில் நாடாக வேண்டுமானல், தனி மனிதனும் சமுதாயமும் மேற்கொள்ளவேண்டிய பல உண்மைகளும், விளக்கங்களும் இதில் காட்டப்பெறுகின்றன. அப்படியே சி. விருத்துப் பிள்ளை அவர்கள் எழுதிய ‘ஏராண்மை நூல்’ (1885) என்பது நாட்டின் அச்சாணியாகிய உழவு பற்றிக் கூறுவது. இதுவும் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலேயாகும். இந் நூலின் முன்னுரையில் கிரந்தச் சொற்களைத் தழுவாமல் ஆங்கிலச் சொற்களை அதிகமாக வழங்கியுள்ளமைக்கு, மொழிப்பெயர்ப்பாளர் காரணம் காட்டுகிறர். இப்படியே வானமண்டலத்தை விளக்கச் சோதி சாஸ்திரம் (1848) ஒன்று யாழ்ப்பாணத்தில் வெளியாயிற்று. வைத்திய முறை பற்றியும் (1863), வரலாறு, நில நூல் பற்றியும் (1858) உரை நடை நூல்கள் வெளிவந்தன. இவ்வாறு மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பற்றிய தமிழ் உரை நடை நூல்கள் வெளிவந்த காலம் சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டே எனலாம். இன்று அதிகமாக வளர்ந்துவிட்ட