பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/123

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
120

தாக எண்ணும் நம் காலத்தைக் காட்டிலும் சென்ற நூற்றாண்டில் எல்லாத் துறைகளும் வளம் பெற்றிருந்தன எனக் கூறுவேன்.

இதழ்கள்

இனி, இன்று நாட்டின் முதுகெலும்பாகக் கருதும் பத்திரிகை வளர்ச்சியைப் பற்றிக் கண்டு அமையலாம் என எண்ணுகின்றேன். கடந்த நூற்றண்டில் நூற்றுக்கு மேற்பட்ட இதழ்கள் தோன்றியுள்ளன. அவற்றிற்குப் பல சமயங்களில் அரசாங்கம் அஞ்சல் குறைப்பு முதலிய வசதிகளைச் செய்து தந்துள்ளது. இருந்தும் அவற்றுள் பல சில ஆண்டுகளே இருந்து மறைந்துவிட்டமையைக் காண்கின்றாேம்.

சில இதழ்கள் மக்களுக்கு நல்ல தொண்டாற்றி வந்தன. பல்வேறு பகுதிகளைத் தன்னகத்துக் கொண்ட பத்திரிகைகள் சில. சமய சம்பந்தமான விளக்கங்களும் மறுப்புகளும் சில பத்திரிகைகள் வழங்கியுள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து தோன்றிய உதய தாரகை பற்றிய குறிப்பினைக் கண்டு அமையலாம்.

உதயதாரகை 1841: Morning Star (gp36b L;#6b 2–6i 6m (5.6LLI) (Published in the 1st and 3rd Thursday of every month at one shilling a Quarter, payable in advance).

சஞ்சிகை ௩.௲௮௱௪௧ ௵ மாசி ௴ ௪ திகதி வியாழக்கிழமை.

கடைசிப் பக்கத்தில் உள்ள குறிப்பு:

Printed and Published at the American Mission Press, Jaffna, by Eastman Strong Minor— Edited by Henry Marly and Seth Payson.

பக்க எண்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் தொடர் எண்களாக உள்ளன.