பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/138

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
135


யர் பூசைபண்ணபடியாலே அகஸ்தியிஸ்பரர் சிவக்கொழுந்தர், துவாபலியுகத்தில் சந்திரன் பூசை பண்ணினபடியினாலே சோமனாதயிஸ்பரர் என்னும் பேர் உண்டாச்சுது.கலியுகத்தில் வியாக்கிரம் பூசை பண்ணினபடியினாலே திருப்புலியிஸ்பரர் என்று பேர் உண்டாச்சுது. அந்த வியாக்கிரம் பூசைபண்ணது என்னமென்றால் யிந்த ஸ்தளம் அனாதியாய் வெகுயுகங்கள் கண்ட ஸ்தல மானபடியினாலே சுவாமியார் யிருந்ததாகவும் அநேக ஆரணியமாயிருந்ததாகவும் அனேக வியாக்கிரமம் முதலான மிருகங்கள் நிறஞ்சிருக்கையில் அதிலே ஒரு வியாக்கிரம் பூர்வ சென்ம புண்ணிய பலத்துனாலேயும் இந்த சுவாமி யாருடைய சன்னதி விசேஷத்தினாலேயும் அந்த புலிக்கி ஞானம் வந்து பூருவ சென்மத்திலே னாம் வெகு பாவம் பண்ணி யித்த சென்மம் வந்தது இனிமேயாகிலும் நல்ல சென்மம் வரவேணுமென்று சுவாமியாரே தியானம் பண்ணயிடத்திலே அப்பேர் அனாதியாயிருக்கிற...

இவ்வாறே வைணவ சமயத்தும் சில புராணங்கள் கொச்சை நடையில் எழுதப் பெற்றுள்ளன. பாகவதம், விஷ்ணு புராணம், பத்ம புராணம், பார்க்கவ புராணம், பாரதம் முதலிய பல எளிய கொச்சை நடையில் எழுதப் பெற்றுள்ளன. இவை அனைத்தும் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் எழுதப்பெற்றனவேயாம். இவற்றின் தன்மைகளையும் கண்டு செல்லலாம்.

(1) பாகவத வசனம்: துன்முகி-மார்கழி, 17 (1836)

முடிவு: பிராம்மணர்கள் படிச்சால் பிரம ஞானியாவார்கள் க்ஷத்திரியரிகள் படிச்சால் சாம்பிராச்சிய பதமடைவார்கள் வைசியர்கள் படிச்சால் சகல ஐசுவரியவான்களாவார்கள் சூத்திரர்கள் படிச்சால் சுபத்தை அடைவார்கள். இது வேதாந்த