பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/140

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
137


அந்த ஆசாரியனாகிய வசிஷ்ட மகரிஷியைச் சாஷ்டாங்கமாகச் சேவித்து யதா சாஸ்திரமாகப் பூசித்து அவராலே உபதேசிக்கப்பட்ட திருமந்திரத்தை உடையவனாய்......... ஸ்ரீவைகுண்டத்தை யடைஞ்சு சமஸ்தகல்யாண குணங்களை யுடைத்தான பரமமான ஆனந்தத்தை யடைந்தான்.

—ஸ்ரீபாத்மோத்தரம் சம்பூர்ணம்.

(5) பார்க்கவ புராணம் பிலவ-தை, 20 (1841)

சோமவாரம் பஞ்சமி அத்த நட்சத்திரத்தில் எழுதி நிறைவேறியது,

முடிவு: இந்த விநாயகருடைய சரித்திரங்களைத் திரிமூர்த்திகளாலும் அளவிடக்கூடாது. சந்திரனைத் தரித்தவராயும் தும்பிக்கை யொடும் கூடிய சுந்தர விநாயகருடைய பாதார விந்தங்களுக்குச் சரணம் சரணம் அவருடைய இரண்டு பக்கங்களிலும் எழுந்தருளியிருக்கிற சித்திபுத்திகளுடைய பாதாம் புயங்களுக்குச் சரணம் சரணம்...சகல லோகங்களும் இகபர பாக்கியங்களும் வாழி வாழி.

இத்தகைய புராணங்கள் எத்தனையோ சென்ற நூற்றாண்டில் உரைநடையில் எழுதப்பெற்றன. அவை அனைத்தும் அச்சில் வந்தன என்று சொல்வதற்கில்லை. மேலும் இத்தகைய கொச்சை மொழியில் அமைந்தன எங்கோ நாட்டுப்புறங்களில் செவிவழியாகவும் ஓலைச்சுவடி வழியாகவும் வாழ்ந்து வந்தமை தவிர்த்து, சிறந்த புலவர்கள் பல புராணங்களுக்கு-செய்யுள் வடிவில் எழுதப்பெற்ற புராணங்களுக்கு - உரைஎழுதினர். திருவிளையாடற் புராணம், பெரிய புராணம் முதலிய இன்றும் வழக்கத்தில் உள்ள சைவசமய நூல்களுக்குத் தெளிந்த உரைநடை நூல்களும் எழுதப் பெற்றன. இவற்றுள் ஆறுமுக நாவலர் அவர்கள் பெரிய புராணத்திற்கு எழுதியுள்ள 'சூசனம். எனும் விளக்கம் சிறந்த நடையில் அமைந்துள்ளது

9