பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/141

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
138

‘உபோற்காதம்’ என்ற தலைப்பில் அவர் தொடங்கிய தொடக்கத்தின் முதற்பகுதியை இங்கே காணலாம்.

அநாதி மலமுத்த பதியாகிய பரசிவன் தனக்கு ஒர் பிரயோசனமுங் குறியாது அநாதிமன் பெத்தராகிய ஆன்மாக்களுக்கு மல நீக்கமும் சிவத்துவ விளக்கமும் சித்திக்கும் பொருட்டு, பெருங்கருணையினாலே படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் பஞ்சகிருத்தியம் பண்ணுவர். அவற்றுள் படைத்தலாவது, சென்மமுடைய பிராணிகளின் சமூகமாயும், போகோப யோகிகளாகிய பரிகாரங்களோடு இயைந்ததாயும், இருக்கின்ற சகத்தை அந்தந்த நானாவித யோனிகளில்

உற்பவிப்பித்தல். காத்தலாவது, தனதிச்சையாற் றடுக்கப்பட்ட சர்வலோகத்தையும், தத்தம் விடயத்தில் நியோகித்து நிறுத்துதல். அழித்தாலாவது, சகத்தைச் சகத்தியோனியில் ஒடுக்கல். மறைத்தலாவது. தத்தம் வாஞ்சனைக்குத்தக்க, போகத்தின் வழுவாதிருக்கச் செய்தல். அருளலாவது, தீக்ஷா கிருத்தியமாகிய அனுக்கிரகம்.

இதில் வடமொழிக்கலப்பு மிக்கு இருக்கிறது. எனினும் மேலே கண்ட கொச்சை நடைக்கும்.இதன் பீடு நடைக்கும் உள்ள வேறுபாடு நன்கு தெரிகின்றதல்லவா? காமம் பற்றி:

திருநீலகண்டர்

ஆறுமுக நாவலர்:-காமம்

—பெரியபுராணம்

பிறவிப் பிணி தீர்ந்து உய்தற்குத் தடையாய் உள்ள காமமானது, எத்துணைப் பெரியோர்களாலும், நீக்குதற்கரிது. அது நினைப்பினும், காணினும் கேட்பினும், தள்ளினும், விஷமானது தலைக் கொண்டாற்போல அத்தகைய நுண்ணறிவாளருடைய அறிவையும் கெடுக்கும் இயல்புடையது.