பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/150

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
147

பச்சையப்ப நாயகர் அவர்களது ‘பரதத்துவப் பிரகாசிகை’ யின் முன்னுரையையும் காணலாம்.

சித்தாந்த ஞான போதம்: துகளறு போதம்- மூலமும்-உரையும்

மூலம் அருளிச் செய்தவர் சீகாழிச் சிற்றம்பல நாடிகள். இதற்கு வைதிக சைவ சித்தாந்த சண்டமாருதம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகரவர்களது மாணவரும், சென்னைக் கிறிஸ்டியன் காலீஜ் தமிழ்ப் பண்டிதரும் ஆகிய நாகப்பட்டினம் வேதாசலம் பிள்ளையவர்களால் புத்துரை செய்யப்பட்டு, மதராஸ் ரிப்பன் பிரஸில் வெளியீடப் பட்டது. 1898.

முகவுரை

துகளறுபோத மெனப் பெயரிய இவ்வரிய சித்தாந்த நூலை ஆக்கியோர் சீகாழிச் சிற்றம்பல நாடிகள் என்று பெரியோர் கூறுகின்றனர். மெய்கண்ட நூல்களின் கருத்தையே யிந்நூல் விரிக்க வந்ததென்பது பாயிரத்தா லறியக் கிடக்கின்றது. சிவஞானபோத முதலிய வுண்மை நூல்களில் அரிதினுணர்தற் பாலனவாய்க் கிடந்த அருங் கருத்துக்கள் இந்நூலில் வெள்ளிடைமலை போலத் தெளிவுற விளக்கப்பட்டிருக்கின்றன. அஃதன்றியும், சைவ சித்தாந்த நூல்களை யுளங்கொளப் பயிலுவதற்குத் தொடங்குமுன் இந்நூலிற் பயிற்சி சிறிதிருக்குமேல் அது மிகவும் பயன்படும். சைவ சித்தாந்தத்தில் இன்றியமையாதனவா யறிந்து கோடற்குரிய பொருள்களெல்லா மிதிற் செறிந் திருக்கின்றன. தத்துவங்களி னியல்பெல்லாந் தெளிவாகவும் விரிவாகவும் உரைக்கப்பட்டிருத்த லல்லாமலும், முத்திக்கணிகழும் பல்வேறு நிலைகளையு மவற்றையெல்லாங் கழித்து முடிவினெய்தும் நிலையையும் ஏனை நூல்களிற் போற்சுருங்க