பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/154

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
151


அப்பொருளறிவின் மாட்சி தெரித்தல் வேண்டியும் தர்க்க நூலியைபும் பிரமாண நுட்பங்களு மிடை யிடையே கொளுவியொரு கோவைப் படுத்துத் தமதுமேற்கோளினிதுவிளங்கவெழுதிய அரியதோ ரெதிர் மறுப்பினை 'நாகை நீலலோசனி பிரபஞ்ச’ மித்திரன்’, ‘தமிழ்ப் பிரதிநிதி, முதலிய பிரபல சஞ்சிகைகளிற் பிரசுரித்தனர். அவ்வெதிர் மறுப்பு நியாய நெறிதழிஇ யுரங் கொண்டுலாவுதலினதனைக் கண்ட அப்புலவர்மார் அவ்வெதிர் மறுப்பான் மேல்மறுப் பொன்றெழுதினரெனவும் அம்மறுப்புப் பிரமாணப் பொருள் காட்டி நிறுவலாற்றாது பிறிது மொழிதல்’ என்னுந் தோல் வித்தானத் தோடியைந்து இகழுரை நிரம்ப நிகழ்த்தி மறுபட்ட தெனவும் எம் நண்பர் பலரோ டியாமொருங்கிருந்த வழி நம்மெதிரில் “தமிழ்ப் பிரதிநிதிப் பத்திராதிபர் கூறினராயினும் அப்போலி மறுப்புரை தானும் இதுகாறும் புறம் போந்திலாமையின், அவர் வெருட்டுரையை ஒரு பொருட்படுத்துவா மல்லே மென்றாெழிக.

இத்தகைய வாதங்களும் தர்க்க நெறிகளும் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே உண்டாகி வளர்ந்துள்ளமைகாண்கின்றாேம். 'சித்தாந்த மரபு கண்டன கண்டனம்’ என்ற நூலில் சிவஞான முனிவர், சித்தாந்த மரபினைப் பழிப்பாரைக் கண்டித்துள்ளார்.

‘வினையாவது அனாதியிலே ஆணவமலத்திலே ஆன்மாவுக்குக் கன்மத்திலுளதாம் விருப்பமென்றார் என்றீர். அவ்வாறிண்டு யாருமில்லை. ஒவரோ குழறுபடையாக எழுதிவைத்த தொன்றனைக் கைப்பற்றிக் குற்றங்கூறப் புகுந்தீர். ‘பொய்யர்குப் பொய்யாய பொய்யினன்’ என்றதுபோல நும் அறிவின் குழறுபடைக்கேற்பவே அதுவும் குழறுபடையாய் நுமக்கு வந்து வாய்த்தது. அன்