பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/157

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
154


விவேகம் உடையவராயின் விலக்கியது செய்தலே தீமை-செய்யாமையே நன்மை என்று பகுத்தறியாமல் விலக்கிய கனியைப் புசித்தது என்னை? அக்கனியைப் புசித்தபின் உண்டாகிய நன்மை தீமைகளின் ஞானம் முன் இல்லாதது என்ன? தந்தை சொல் மீறும் அவன் குழந்தையின் பாபம் தந்தையைச் சாருமாப் போலவே ஆதிமனுஷரின் பாபம் ஆண்டவரைச் சாருமே! கனியை உண்டால் நன்மை தீமைகளின் ஞானம் உண்டாதல் கூடுவதாக, அதை விலக்கியது வஞ்சகமாமே! கிருத்துநாதர் பல அற்புதங்கள் செய்ததால் தேவன் எனக் கருதினால், மோசே, யோசுவா, எலிசா, எலியா முதலானவர்களும் தேவனாகக் கருதப்பட வேண்டும். பொய்க் கிருத்துவர்களும், பொய்த் தீர்க்கதரிசிகளும் எழும்பித் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் தாமும் மயங்கத்தக்க மகா பெரிய அற்புதத்தையும் செய்வார் என்று சொல்லப்பட்டதால் அற்புதஞ் செய்தலினல் தேவன் என்று சாதித்தல் கூடாது. கணவனாற் சேரப்படாத மரியாள் என்ற கன்னிக்குப் பிறந்ததால் தேவன் எனினும், அந்தப் பெண் யோசேப்புவுக்கு மனைவியாக நியமிக்கப்பட்ட பின்பே கர்ப்பந் தரித்தாளாதலின் அவனாலாயினும், பிறராலாயினும் சேரபட்டே கருப்பந் தரித்தாள் என்று சொல்ல வேண்டும். எனவே இயேசு தேவன் அல்ல. தேவத்தன்மை பொருந்தியவனுமல்ல.

இவ்வாறு சைவ சமயத்தின் சிறப்புப் பற்றியும் பிற சமயங்கள் பற்றியும் இவர்களேயன்றிக் காஞ்சி சபாபதி முதலியார், காசி விஸ்வநாத முதலியார், முதலியவரும் பெயர் தர விரும்பாத சிலரும், சில துறவிகளும் பல்வேறு உரைநடை நூல்கள் இயற்றியுள்ளனர். அவை அனைத்தும் பெரும்பாலும் தெளிந்த நடையுடையனவாகவே அமை