பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
13

ஆயினும் சில மேலை நாட்டு ஆய்வாளர்கள் பாட்டு முதலில் தோன்றிற்று என எழுதுகின்றனர். அது எவ்வாறு பொருத்தும் எனத் தெரியவில்லை. குழந்தை முதலில் பிறந்ததும் அழுகிறது; பிறகு பேசுகின்றது. அழும் இசை முன்னாதலின் அது பாட்டாக முன் தோன்றியிருக்கும் என்பது அவர் வாதம். குழந்தை அழுவது இசையாக இருக்கலாம் - ஆனால் அது மொழியிடைப்பட்ட பாட்டோ செய்யுளோ எப்படியாகும்? அந்த அழுகையில்-இசையில்மொழியே இல்லையே. குழந்தை வளர வளர மெல்ல மெல்ல, பெற்றேர் உணர்த்த ஒவ்வொரு சொல்லாகப் பேசிப் பேசியன்றோ உரை நடையைக் கற்றுக் கொள்கிறது. பின் வேண்டுமாயின் இசையும் பாட்டும் இயையப் ‘பெறலாம். எனவே இக்கூற்று ஏற்றுக்கொள்ளக் கூடியது தான? அறிஞர்களே ஆய்ந்து முடிவு காணட்டும்.

“செய்யுள்“ என்பது முற்கால வழக்கில் இலக்கியச் செறிவுள்ள உரையையும் தழுவி யிருந்தது. 'உரைச் செய்யுள்’ என்ற வழக்கு இதற்குச் சான்று.

இலக்கணம் இலக்கியம் உரையெனப் பெயர்பட்
டிருக்குமென் றெண்ணுக செய்யுளின் இயல்பே

என்பது இலக்கணக்கொத்து. உலக வழக்காகப் பேசப்படுவதும் எழுதப்படுவதும் உரைநடை, உரை வாசகம் என வழங்கும். உரை வாசகம் என்பது இரு பெயரொட்டு. தமிழில் வசனம் என்ற வடமொழியே, சில காலமாய் உரை நடையைக் குறிப்பதாய்ப் பெருவழக்கினதாயிற்று. உறுதிச் சொல், ஏற்ற சொல், பொருளுற்ற சொல் எனப் பொருள்படும் கட்டுரை என்னும் வார்த்தையும், உரைநடையைக் குறிக்கிறது. இது ‘கட்டுரை வன்மை’ என் பதனால் போதரும். 'கட்டுரை வகையான் எண்ணோடு புணர்ந்து’ எனத் தொல்காப்பியத்திலும் வருகிறது.

“பழைய சங்க நூல்களெல்லாம் பாக்களால் ஆனவை. முற்றும் உரை நடையான வசன நூல் யாதொன்றுமில்லை. அடிவரை யின்றி வரும் செய்யுளின் வகை நூலும், உரை