பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/160

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
157


திவ்யதேச சேவக் கிரமங்களையெல்லாம் ஒன்றாய்ச் சேர்த்து என்னால் இந்நூலில் அச்சிட்டுப் பிரசித்தி செய்யலாயிற்று. இந்நூலில் சொல்லியபடி கூடிய வரை சிரத்தையொடு நடப்பவர்கள் ஒரு குறையுமின்றி நிரதிசயானந்தத்தைப் பெறுகிறர்கள்.

இவ்வாறு பல வகைகளில் வைணவ சம்பந்தமான உரைநடை நூல்கள் வெளிவந்துள்ளன. இவ்வாறே பாரதம், இராமாயணம் முதலிய வடமொழி இலக்கியங்களை உரைநடையில் பலர் எழுதி வெளியிட்டுள்ளார்கள். பெரிய எழுத்தில் தடித்த அளவில் சாதாரணக் கிராம மக்கள் படித்தறியும் வகையில் அவை அமைந்துள்ளன. கிராமங்களில் ஓய்வு நாட்களில் திண்ணைகளில்-இராப்பொழுதில் ஒருவர் இத்தகைய உரைநடையை வாசிக்கப் பலர் கேட்கிற வழக்கம் நமக்குப் புதியதன்றே. இந்த வாசிப்பிற்கு வேண்டிய நூல்களில் பல சென்ற நூற்றாண்டில் எழுதப் பெற்றவையே. இதற்கு ஒரு சான்று காணலாம்.

ஸ்ரீ திராவிட மஹாபாரத வசனம்: இரண்டாவது வாலம்

(2) (Vols.)

இஃது வாக்கிய ரூபமாக அச்சிட்டுத் தரும்படி நிலைபெற்ற-சைவ - வைஷ்ணவ - ஸ்மார்த்த சமயப் பிரபுக்கள் கேட்டுக்கொண்டபடி ஸ்ரீ வேத வியாசர் செய்த கீர்வாண பாரதத்தை-தமிழில் நல்லாப் பிள்ளை செய்த பாடலை உரையிட்டபடி த. சண்முகக் கவிராஜரால் முன் பதிப்பித்த பிரதிக்கிணங்க, திருவொற்றியூர் பரசுராம முதலியார் குமாரர் கன்னியப்ப முதலியார் அண்டு பிரதர்ஸ் அவர்களால் தமது பரப்பிரம முத்திராக்ஷரசாலையில் பதிப்பிக்கபட்டது. (II Editian–1886)

நூலுள் ஓர் எடுத்துக்காட்டு: இத் தன்மையாகப் பக்தர்களைக் காக்கும் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தியையும் ஸ்ரீவேத வியாசரையும் பணிந்து, பொன்