பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/171

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
168

தமிழில் சிறந்த அறிவும் எழுத்தாற்றலும் பெற்ற அறிஞர்கள் சைவம் வைணவம் முதலிய இந்நாட்டுத் தொன்மைச் சமயங்களைச் சார்ந்திருந்தமையின் அவர்கள் உதவி கேட்டாற் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற ஐயத்தால் அவர்களைச் சாராதிருந்திருக்கலாம். எனினும் சிறந்த சைவத் தூணாகிய ஆறுமுக நாவலர் முதலியோர் விவிலிய நூலினை மொழி பெயர்த்தார் எனக் காண்கிறோமே. எனவே, கல்லா மக்களோடு பழக நினைத்த மேலை நாட்டு அறிஞர்களும், தமிழ் நாட்டில் அச்சமயம் தழுவிய முன்னோடிகளும், அக்கல்லா மக்களுக்கு எளிதில் உணர்த்தவே இந்த வகை உரைநடையினைக் கையாண்டார்களோ என நினைக்க வேண்டியுள்ளது. எப்படியாயினும் ஒரு சில நூல்களைத் தவிர்த்து, பெரும்பாலாகச் சென்ற நூற்றாண்டில் வந்த இச் சமய நூல்களின் உரைநடை மிக எளிமையாகவும் கொச்சையாகவுமே உள்ளது. சில மேலை நாட்டு அறிஞர்கள் நல்ல நடையில் எழுதி யிருப்பினும் தேம்பாவணி முதலிய இலக்கியங்களும் 'போப் ஐயர் இலக்கணம் முதலிய இலக்கணங்களும் எழுதப்பெற்றிருந்த போதிலும் பல உரைநடை நூல்கள் எளிமையாக உள்ளமை கண்கூடு. இந்த நூற்றாண்டில் இந்த நிலை மாறிக்கொண்டி வருவதையும் காண்கின்றாேம்,

நன் மரண ஆயத்தம் என்ற நூலைப் பற்றி ‘இப்புத்தகத்தை அவஸ்தைப்பட்ட சேசு கிறிஸ்து நாதருடைய திரு இதயத்துக்கும் வியாகுல வாளாலூடுருவப்பட்ட தேவ மாதாவினுடைய மாசிலாத் திரு இதயத்துக்கும் பாத காணிககையாக ஒப்புக் கொடுக்கிற செபம்’ என்று விளக்கம் தரப் பெற்றுள்ளது. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை, இந்நூல் 1860இல் எழுதப்பெற்றுள்ளது. இதில் ஒரு தொடர் காண்போம்.

இதனைச் சுவீகசரிக்கு மன்புள்ள சகோதரரே! உங்க ளாத்துமங் கரையேற்றுவதற்காக இச்சிறு புத்தகத்தை வருந்திச் செய்த நமக்கு நல்மரணங்