பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/185

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
182

அவர்கள் சிந்தாமணி முதலிய சில நல்ல இலக்கிய நூல்களை வெளியிட்டுள்ளார். இவரனைவரும் தத்தம் வெளியீட்டு நூல்களுக்கு முன்னுரை, குறிப்புரை, விளக்கம் முதலிய எழுதிய காரணத்தால் சென்ற நூற்றாண்டின் உரைநடைக்கு ஆக்கம் தந்தவராகின்றனர்.

ஆறுமுக நாவலர் சைவ இலக்கிய நூல்களும் உரைகளும் பாட நூல்களும் மட்டுமன்றி மாணவருக்கு எளிதில் விளங்கத்தக்க இலக்கண நூல்களும் உரைநடையில் எழுதி உதவினர்.

எழுத்தியல் இலக்கண நூலாவது உயர்ந்தோர் வழக்கத்தையும் செய்யுள் வழக்கத்தையும் அறிந்து விதிப்படி எழுதுதற்கும் பேசுதற்கும் கருவியாகும் நூலாம்.

அந்நூல், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், தொடர் மொழி யதிகாரம் என மூன்றதிகாரங்களால் வகுக்கப்படும்.

என்று காட்டி, உடனுக்குடன் 'பரிக்ஷை வினாக்கள்’ என்ற பகுதியையும் அமைத்து அதில் அவ்வப் பகுதிகுரிய வினாக்களையும் தந்து கொண்டே செல்கின்றர்.

௧. இலக்கண நூலாவது யாது? ௨. அந்நூல் எத்தனை அதிகாரங்களாக வகுக்கப்படும்?

என்பன நாம் மேலே கண்ட பகுதிக்குரிய வினாக்கள். இவ்வாறு இலக்கண இலக்கியங்கள் பற்றி எளிய முறையில் அமைத்து எழுதியுள்ள அறிஞர் இன்னும் சிலர். விசாகப் பெருமாள் ஐயர்தம் நன்னூல் உரையும் இவ்வாறே சிறந்த எளிய நடையில் பொருள்விளக்கம் உடையது; இத்துறையில் இன்னும் பல உள்ளன,

1883இல் இலண்டன் நகரில் அச்சாகிய நூல் ஒன்றில் {A hand book of ordinary dialect of the Tamil Language in three parts) தமிழ்ப்பாடல் பற்றிய விளக்கங்களும்