பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
16

‘தமிழில்’ ‘செய்யுள்’ என்ற ஒரு சொல் உள்ளது என மேலே கண்டோம். செய்யப்படுவன அனைத்தும் செய்யுளே. எனவே உரைநடையும் செய்யப்படுவது தானே. ‘ஆம்’ எனவே உரைச் செய்யுள் எனக் கொள்ளலாமா? கொள்ளலாம். பல்கலைக்கழக தமிழ்ப் பேரகராதி இதை நமக்கு எடுத்துக் காட்டுடன் விளக்குகின்றது. செய்யுள் என்பதற்கு உரை என்றே பொருள் உள்ளது என்பதை அது காட்டுகிறது.[1] தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் இந்த விளக்கம் நன்கு காட்டப் பெறுகின்றது. ஆங்கிலத் ‘Prose’ என்ற சொல்லுக்கு ‘Straight forward arrangement of words”[2] என்றும் ‘Plain matter of fact quality’& “ordinary nonmetrical form of written or spoken language”[3] என்றும் பொருள் உண்டு. நாம் மேலே பொன்னுரையோடு பொருத்திக் காட்டிய உண்மை விளக்கம் தரும் உரைநடைக் கருத்தினை இவை வலியுறுத்துகின்றன. மேலும், செய்யுள் என்ற சொல்லை உரை, பாட்டு இரண்டுக்கும் பயன்படுத்தினர்கள் எனவும் காணமுடிகிறது. உரைச் செய்யுள், பாச் செய்யுள் எனவே அவை வழங்கப் பெற்றன-பெறுகின்றன. இரண்டும் விரவியவற்றையே இளங்கோவடிகள், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ எனக் காட்டிச் செல்கின்றார். ‘Poem’ என்ற ஆங்கிலச் சொல் தமிழில் உள்ள ‘செய்யுள்’ என்ற சொல்லுக்கு நேர் பொருத்தமான ஒன்று என்று கொள்வது தகும். ‘Poem’ என்ற சொல்லுக்கு ‘elevated composition in prose or verse’[4] என்றும் ‘a composition of high beuaty of thought or language, although not in verse” [5] என்றும் விளக்கம் தரப்பெறுவதை காண்கிருேம். மேலும் ‘Poetry’


  1. Tamil Lexicon, Vol. III, p. 1602.
  2. Chambers Twentieh Dictionary, p. 738.
  3. Oxford Dictionary, p. 925.
  4. Oxford Dictionary, p. 881.
  5. Chambers Dictionary, p. 707.