பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/196

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
193


கிராப் வேண்டியபடி எடுத்துக்கொள்ளலாம் ...... படம் எழுதும் மொச்சியன் என்னைப்பார்த்திருப்பவனாகியிருந்தால் உத்தமந்தான்-1887 சீவக சிந்தாமணி வெளியீடு.

இவ்வாறே கிறித்தவ சமயம் பற்றிய கடிதங்களும் உள்ளன. அவற்றுள் ஒன்றினை இங்கே தருகிறேன்.

புதுவை அப்போதஸ்தொலிக்கு விக்காரியாராகிய சவேரியார் அருளப்பர் மரியநாத லவுனேன் என்னும் நாமதேயங் கொண்டிருக்கும் பிலாவியோபொலி மேற்றிராணியாரவர்கள் தமது ஞானதிகாரத்துக்குட்பட்ட சகல கிறிஸ்துவர களுக்கும் எழுதியருளிய நிரூபம் (புதுவை ௲௮௱௰௫௵).
(நீண்ட கடிதம்)

கடித முடிவு

நீங்கள் இந்தப் பிரகாசத்தில் நடந்து சத்திய வேத நெறியிற் சென்று புண்ணியத்திற் சிறந்தவர்களாய்ச் சீவித்து சிவாந்தத்தில் நித்திய பிரகாச பாக்கிய பேரின்பத்தை அடையும்படி விரும்பி உங்களுக்குப் பக்ஷம் நிறைந்த மனதுடன் ஆசீர்வாதங் கொடுக்கிறோம்.

இப்படிக்குப் புதுவையில் ௲௮௱௭௰௫௵ ஸ்ரீ தேவ மாதாவின் திருமணத் திருநாளாகிய சனவரி௴ ௨௩௨ நம்முடைய கையெழுத்தும் முத்திரையையும் போட்டு நம்முடைய செக்கிறேத்தராகிய சம்பிரதியும் இதனடியிற் கையெழுத்து வைத்துத் தந்தது.
மகா சங்கைக்குரிய கனம்
பொருந்திய ஆண்டவர் உத்தாரத்தின்படியே

சென்னைக் கல்விச் சங்கத்துப் புத்தகப் பரிபாலராகிய கொற்றமங்கலம் இராமசாமிப்பிள்ளை அவர்கள் ‘நீதிசார