பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/201

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
198

நூல் முடிவில்:—விறகு தலையனென்கிற பேருமாற்றி அவனுக்கு உறையூர்க் குமாரனென்கிற பட்டமும் கட்டிவித்து அவளுக்கு தமிழறியும் பெருமானென்கிற பேருமாத்தித் தில்லைப் பெருமானென்கிற பட்டமும் கட்டுவித்து அவளுக்கு வரிசை மானியமும் உம்பிளிக்கையும் கட்டளையிடுவித்து நக்கீரதேவரை ஆனை மத்தகத்திலே வைத்துப் பட்டணம் பிரவேசமாக வரச் சொல்லி வந்தபிறகு சோழனாலு நக்கீரதேவர்க்கும் பல்லக்குமிட்டு வெகுமானத்துடனே மதுரைக்கனுப் பினர். நக்கீர தேவரும் மதுரையில் சென்று பாண்டியுனுக்கு சங்கத்தார்க்கும் தமிழறி மடந்தையின் வர்த்தமான மெல்லாஞ்சொல்லி இருந்தாரென்ற வரலாறு.

2. விக்கிரமாதித்தன் கதை—வசனம் (ஏடுகள் முடியவில்லை) முடிவு:—மற்றப் பெண்களோடே வந்த சீதனங்களோடே தோழிப்பெண்கள் ஆனை குதிரையுள்படக் கூட்டிக்கொண்டு தன்னுடையசேனதிபதிகளும் மந்திரிமாரும் சதுரங்கசேனைகளும் தரும துரைமார்களும் புரோகிதரும் வேவுகாரரும் வரிசை ஊதியக்காரருமாகப் பட்டி சொற்படி உக்கிரமாகாளிப் பட்டணத்திலே வந்து திருவிராச்சியம் பண்ணிக்கொண்டிருந்தான். அந்த விக்கிரமாதித்தன் சிங்காசனம் நீயோ ஏறுகிறவனென்று போசராசாவோடே அந்தப் பதுமைகள் சொல்லிச் சிங்காசனமேறாதபடி விலக்கின கதை.
இராம செயம். ஆறுமுகம் துணை.

3. தேரூர்ந்த சோழன் கதை: முடிபு:—அன்பு சோதிக்க வந்தோர் ராசாவே நீரும் தேவியும் குமாரனும் மந்திரியும் கயிலாயமே வாருங்கோளென்று இந்திர விமானத்தி லேற்றிக்கொண்டு பரமேச்சுவரனும் பார்வதியாரும் கயிலாயமே எழுந்தருளினர்கள். ஆகையினலே இந்தத் திருவிளையாடலை(ப் பார்த்த) பேர் கேட்டப்பேர் இந்த