பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
31

உன்னிட்டு வேண்டுவன வையரத்துக்கு இரை மிகுதி கொண்டு செய்ய இவன் காணியான நிலத்துக்குத் தந்த ராசாதிராச வளனாட்டு பாண்டூரான குலோத்துங்க சோழன் வல்லத்து நிலமாய் ராச ராசன் அம்பர் யென்னும் பெறவேணு மிடுக்கச் சொன்ன நிலம் நாற்பத்திநாலேகாலும் பதினாராவதினெதிராமாண்டு பிசான முதல் யிச்சாலைக்குக் காணிக்கைக் கொள்ளவும், இந்த நிலத்துக்கு இவன் தந்த சாதனம் திருக்கை ஒட்டியிலே ஒடுக்கி வைத்துக்கொண்டு இப்படிக் குலோத்துங்க சோழன் திருமாளிகையிலே கல்வெட்டவும் கடவதாகப் பெறவேணும் யென்று இவன் நமக்குச் சொன்னமையில் யிப்படி செய்யக் கடவதாகச் சொன்னோம். இப்படி செய்யப்பண்ணுவது, யெழுதினான் திருமந்திர ஓலை நெறியுடைய சோழ வேந்த வேளாயென்றும் திருவாய் மொழிந்தருளினார் இவை செதிராயன் எழுத்தென்றும் இவை விழுப்பாதிராயன் யெழுத்தென்றும் இவை காலிங்கராயன் யெழுத்தென்றும் இவை செகுதிராயன் யெழுத்தென்றும் இவை காங்கெயராயன் யெழுத்தென்றும் பிரதாசம் செயிதருளி வந்த செய்யும்படி கல்வெட்டியது.’[1]

மணிப் பிரவாளம்

இக்கல்வெட்டுச் சிதம்பரம் கோயிலில் உள்ளது என அறிகிறோம். இதன் நடையில் பெரு மாறுதல் நம்மாள் உணர முடிகின்றது. எழுத்துப் பிழைகளும் நிரம்ப உள்ளதையும் காண்கின்றாேம். இதுவரை நாம் கண்டு வந்த உரைகளுக்கும் இதற்கும் உள்ள வேற்றுமையினையும் நம்மால் உணர முடிகின்றது. இவை கல்வெட்டுகளானமையின் கல்லில் செதுக்க முடியாதநிலை


  1. தென்னிந்தியக் கோயிற் சாசனங்கள், தொகுதி, பக் 32, 33, சிதம்பரம் கோயிற் கல்வெட்டு, எண்: 266-1913.