பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
33

வளர்ச்சி எல்லையில் அதுவும் ஒரு மைல் கல்லாக அமைகின்ற காரணத்தால் அந்த நடையிலேயும் நாம் ஒன்று காணல் தேவையே. நம் பல்கலைக் கழக முயற்சியினால் அது படித்து உணரத்தக்க வகையில் வெளிவந்துள்ளமை மகிழ்ச்சிக்குரியதே. ‘அஞ்சிறைய மடநாராய்’ என்ற பாட்டின் ‘நல்கித்தான் காத்தளிக்கும்’ என்ற தொடருக்கு உரிய உரையைக் காண்போம்.

‘(நல்கி) விபூதி ரக்ஷணம் பண்ணும்போது கர்த்தவ்ய புத்தியாவன்றிக்கே பேறு தன்னத்தாகக் கிடீர் ரக்ஷிப்பது. எனக்குத் தன் பக்கல் உண்டான வியா மோகம் தனக்கு விபூதியிலே உண்டாயிற்று. ரக்ஷிப்பது (தான்) அபேக்ஷிப்பாரின் றிக்கே யிருக்கத் தானே ரக்ஷிக்கும் அவன். (பொழிலேழும்) கீழும் மேலும் ஒன்றாக நினைத்துச் சொல்லுகின்றதால், ஸ்வ சரீர ரக்ஷணம் பண்ணுவது ஸ்நேக புரஸ்ஸரமாகையிறே. ‘நல்கி தான்’ இத்யாகி) நாமரூப விபாகா நர்ஹமாய் கிடந்தவன்று யாரிடமிருந்து அபேக்ஷிக்க இத்தை உண்டாக்கிற்று. சக்திய வஸ்த பிரபை (நீறுபூத்த நெருப்பு) போல, தான் என்கின்ற சொல்லுக்கு உள்ளேயாய்த் தன்னையிட்டு விவரிக்கவேண்டின அன்று தன்மேலே ஏறிட்டுக் கொண்டு நோக்கினானாயிற்று (காத்தளிக்கும்) காத்துக் கொடுக்கு மென்னுதல் (‘வினையேற்கே நல்கத்தா னாகாதோ’) இல்லாதவன்று உண்டாக்கினாய், உண்டாக்கினதற்குப் பலம் கர்மத்தை ஏறிட்டுக் கைவிடுகையோ? ஸ்வ ஜனரக்ஷணம் பண்ணவாகாதோ? நாட்டுக் கிட்ட நினைப்பு அந்தப்புரத்துக்கு அரிதாக வேணுமோ? (‘வினையேற்கே’) கடலிலே ஏற்ற மிட்டுத் தண்ணீர் அரிதாம்படியான பாவத்தைப் பண்ணுவேனே. (‘நாரணனைக் கண்டக்கால்’) ஜீவ சமூகத்தினுடைய ஸ்வரூப ஸ்திதியாதிகள் ஸ்வாதனமாய் இவை ப்ரகாரமாக, தான் பிரகாரியாய், இவற்றிலே ஒன்று குறையிலும் தம்