பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
34

இழவாம்படி இருக்கையாலே நாராயணன் என்று விருதுழதித் திரிகிறவரைத் கண்டக்கால், இப்பேர் யோக ரூடியோ என்றிருந்தோம் மஹா விருட்சத்தோபாதியோ என்று கேளுங்கள் (கள்ளி, மல்குநீர் இத்யாதி) உன்செயல் பரார்த்தமாய் இருந்ததீ: பெருகா நின்றுள்ள நீரை உடைத்தான நீர் நிலம் உண்டு—கொடித் தோட்டம் அதிலே (இரை தேர்) பெடையின் வாய்க்கு அடங்குவது தேடா நின்றது. புள்ளுப் பிள்ளைக்கு இரைதேடும் எனக் கடவதிறே? கயலுகளா நிற்கச் செய்தேயிறே, பிள்ளை வாய்க்கடங்குவது தேடுகிறது.’

இதில் கடவதிறே, செய்தேயிறே என்ற சொல்லமைப்பு முறைகளையும் வடமொழிச் சொற்கள் மட்டுமின்றி எழுத்துக்களும் அப்படி அப்படியே எடுத்தாளப் பெறுவதையும் காண முடிகின்றது.

திருப்பம்

ஏறக்குறைய பதினாறாம் நூற்றாண்டிற்குப் பின் தமிழ் உரைநடை மறுபடியும் வீறுநடையிட்டு வளரத் தொடங்கியது எனலாம். எனினும், அந்த நூற்றாண்டில் சிறந்த உரைநூல்களைக் காண முடியவில்லை. ஆயினும், அடுத்த நூற்றாண்டில் காணும் உரைநடையை நோக்கும்போது அதற்குமுன் நூற்றாண்டிலும் அதன் செழுமை புலப்படாமல் போகாது. பிற்காலத்திய உரையாசிரியர் நிலையில் சிறு மாறுதல்கள் காண்கின்றாேம். நூலெழுதியவர்களே உரை எழுதல் நலம் பயக்காது என்ற காரணத்தினலோ ஏனோ பழங்காலத்தில் உரையாசிரியர்கள் நூலாசிரியரினும் வேறு பட்டவராக இருந்து அவ்வந் நூல் பற்றிய ஆய்வுகளைத் தெள்ளத் தெளிய வெளியிட்டனர். ஆயினும், பதினேழாம் நூற்றாண்டை ஒட்டி வாழ்ந்த இலக்கண நூல்கள் இயற்றிய வைத்தியநாத தேசிகர், சாமிநாத தேசிகர் முதலியோர் தாமே தம் நூல்களுக்கு உரையும் எழுதினர் என்பர்.