பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
50

பாக அறநூல்களுக்கு உரைகள் எழுதத் தொடங்கினர் காவியங்களாக இருந்த பல இலக்கியங்களை எல்லா மக்களும் உணர்ந்து கொள்ளுமாறு ‘வசன’ நடையில் எழுதிய அறிஞரும் பலர் பண்டமாற்று, விற்பனை முதலியன பற்றி ஏற்பாடு செய்துகொள்ளவும், விண்ணப்பம் அறிக்கை முதலியன அமையவும் உரைநடையே இடந்தந்தது. அறிவியல் வளர்ச்சி பற்றிய பல்வேறு கருத்துக்களை மக்களிடம் பரப்பத் துணைசெய்ததும் இவ்வுரைநடையேயாகும். இவ்வாறு சென்ற நூற்றாண்டில் பல்வேறு சூழல்களால் உரைநடை வளர்ந்ததோடு, தன் வளர்ச்சியுடன் தமிழ் நாட்டில் பல்வேறு அமைப்புக்களையும் கலைகளையும் சமயநெறி முறைகளையும் அறிவியல் உண்மைகளையும் பிறவற்றையும் வளர்த்து உதவியது.

பல மாற்றங்கள்

தமிழ் நாட்டின் இதயமாகிய தஞ்சை, 1799-இல்-பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைவாயிலில்-மராட்டிய மன்னரிடமிருந்து ஆங்கிலேயர் கையில் வீழ்ந்தது. அதற்கு முன்பும் பின்பும் தமிழ்நாடு முழுவதும் அண்டை நாடுகளாகிய மைசூர், ஆந்திரம் முதலிய பகுதிகளும் அவர் வசமாயின. தஞ்சையில் வாழ்ந்த சரபோசி மன்னன் (1798-1833) தன் வாழ்நாளில் மொழிக்கும் அறிவு வளர்ச்சிக்கும் பல ஆக்கப் பணிகள் செய்துள்ளான். இன்றும் தஞ்சையிலுள்ள பெருநூல் நிலையம்-சரஸ்வதி மஹால் நூல் நிலையம் - அவன் உருவாக்கியதேயாகும். எனவே நம் ஆய்வில் அமையும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உண்டான அந்த நூல்நிலையம் இன்றும் நிலைத்து-இனியும் ஓங்கி வளரத்தக்க வகையில்-பல்வேறு துறைகளில் நாட்டு மக்கள் அறிவு ஆக்கம் பெறப் பணி புரிவதறிய மகிழ்ச்சி உண்டாகின்றதன்றாே? அக்காலத்திலேயே அதில் தமிழ், வடமொழி முதலியவற்றில் 22000 நூல்கள் இருந்தனவாம். நாணயப் பொருட்காட்சியும் அவன் அமைத்திருந்தான். பல நாடகங்கள் எழுதவும் அவன் உதவினன்; அந்தணர்களுக்குத் தானங்கள் செய்