பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
58

வில் முதல் ஆங்கில இதழ் 1780 இல் கல்கத்தாவில் வெளிவந்தது). 1830 வரை தமிழில் தனி இதழ்கள் தொடங்கப் பெறவில்லை. அதற்குப் பிறகு, சில இதழ்கள் வெளிவந்தன. (வங்காள மொழில் தான் முதல் நாட்டு மொழி இதழ் 1816 இல் வெளிவந்தது). சென்ற நூற்றாண்டின் தலைவாயிலில், 1799இல் (13—5—1799), கவர்னர்-செனரல்,பத்திரிகை உரிமையாளர், ஆசிரியர் முதலியோர் பற்றிய குறிப்புககள் (கடைசி பக்கம் அச்சிடுவது) வெளிட வேண்டிய உத்தரவைப் பிறப்பித்தனர்.அரசாங்க வெளியீடு (Fort St. George Gazette) 4—1—1832 இல் வெளிவந்தது. அக்கால ஆட்சியாளர் லூஷிங்டன் (S. R. Lushington) ஆவார். இத்தகைய இதழ்கள் பற்றி அரசாங்கம் சென்ற நூற்றாண்டில் பல்வேறு கட்டுபாடுகளை உண்டாக்கியும், தளர்த்தியும், வளர்த்தும் வந்துள்ளது. அவற்றால் சிற்சில வேளைகளில் நலிவும் தாழ்வும் உண்டான போதிலும் அக்கால உணர்வுடை மக்களின் விடாமுயற்சியே இன்று தமிழ் நாட்டில் எண்ணற்ற தமிழ் இதழ்களையும் அவற்றின்வழித் தமிழ் உரைநடை வளர்ச்சியையும் காணமுடிகின்றது. அவற்றுக்குப் பலவகை அஞ்சல் சலுகை முதலியனவும் தரப்பெற்றமை காண்கின்றோம். இலவச அஞ்சல் முறையும் சில காலம் இருந்திருக்கிறது.

சென்னை மாநிலத்தில் தமிழிலும் தெலுங்கிலும் ஆங்கிலத்திலும் சில பத்திரிகைகள் வெளிவரலாயின, வித்தியார்த்தி (1838 அல்லது 40), இந்து (1878), சுதேசமித்திரன் (1882), மெயில் (15–12–1867), ராஜவர்த்தி போதினி (1855), தினவர்த்தமானி (2–12–1814), கிறிஸ்தவ மறுப்பு (1814) முதலியன அவை. காங்கிரஸ் 1885 இல் தோன்றிய பிறகு உரிமை உணர்ச்சிமிக்குத் தமிழில் பல கட்டுரைகள் வந்தன. சென்ற நூற்றாண்டு முழுதும் பத்திரிகைக் கட்டுப்பாடு அதிகமாக இருந்தது எனலாம். 'கம்பெனி' ஆட்சியில் (1785-1857) பல கட்டுப்பாடுகள் இருந்தன. 1816 வரை அதிகக் கட்டுப்பாடுகள் இருந்தன; 1818-23 இல் சில தளர்த்தப்பெற்றன. 1823–28 வரை மிகக் கடுமையாக இருந்தது. 1835–57 இல் பல சீர்திருத்தங்கள் செய்யப்