பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
58

பெற்றன. ஆங்கிலப் பாராளுமன்ற நேரடி ஆட்சிக்கு வந்த பிறகும் (1857) இத்துறையில் பல மாறாட்டங்கள் வந்தன.[1] இவைகளுக்கிடையில் பல இதழ்கள் தமிழையும் தமிழ் உரைநடையையும் வளர்த்தன. தமிழ் நாட்டில் மட்டுமன்றி இலங்கை, மலேயா முதலிய நாடுகளிலும் இதழ்கள் பல தோன்றி வாழ்ந்தன.

சமயத் துறை

சமயத் துறையும் சென்ற நூற்றாண்டில் தமிழ் வளர்ச்சிக்கு–சிறப்பாக உரைநடை வளர்ச்சிக்கு–உதவியது. கிறத்தவர் அச்சக வழியும் விவிலிய நூல்மொழி பெயர்ப்பு வழியும் செய்த தொண்டினைக் கண்டோம். தஞ்சைச் சரபோசி அச்சமயத்தாருக்கு நன்கு உதவினன். கிறித்தவ சமய அச்சகம் (Society for the Propagation of Christian knowledge) 1711 இல் அச்சகம் அமைத்தது. தம் சமய நூல்களை எழுதி வெளியிட்டது. அந்நூல்கள் யாவும் உரை நடை நூல்களே. செத்வார்ட் (Setwartz 1728–1798) பல வகையில் இத்துறையில் உழைத்தமை காண்கிறோம். நாகையில் டேனிஷ் மிஷன், தரங்கம்பாடி அச்சகம், புதுவையில் அச்சுக்கூடம் இவ்வாறு பலவிடங்களில் கிறித்தவர் சென்ற நூற்றாண்டின் முன்னும் தொடக்கத்தும் பல உரைநடை நூல்களை வெளியிட்டனர். மேலும் அதற்கு முன் வாழ்ந்த வீரமாமுனிவர் முதலியவர் எழுதிய நூல்களை வெளியிட்டனர். பிற்பகுதியில் பல மொழி பெயர்ப்பு நூல்களும், பாட நூல்களும், அறிவியல் நூல்களும் இவர்களால் வெளியிடப் பெற்றன. புராட்டஸ்டண்டு கிறித்தவர்களும் தம் நூல் வெளியீடுகளால் சிறந்த தொண்டினை இந்நூற்றண்டின் பிற்பகுதியில் செய்துள்ளனர். புதிதாக வந்த இந்தச் சமயத்தார் இவ்வாறு வெளியீடுகளைக் கொண்டு வந்தபோது, இங்கேயே தோன்றி வளர்ந்த சைவ சமயத்த வரும் பிற வேதாந்த வைதீக சமயத்தாரும் வாளாயிருப்பார்


  1. The Press in India, J. C. Nirmal, M.A.