பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
60

களோ? கிறித்தவ சமயத்துக்கு மாறாகப் பல்வேறு உரை நடை நூல்களை உண்டாக்கியதோடு, தம் சமய உண்மைகளின் அடிப்படையில் சில நல்ல எளிய உரைநடை நூல்களை மக்கள் முன் வைத்தனர். ஆறுமுக நாவலர் முதலியவர்கள் விவிலிய நூலைத் தமிழில் மொழிபெயர்த்து உதவிய தோடு, சைவசமயம் பற்றி எளிய வகையில் பல நூல்களை வெளியிட்டுள்ளனர். தமக்கெனச் சொந்த அச்சகம் அமைத்துக் கொண்டு அவர் வெளியிட்ட நூல்களுள் பல இன்றும் வாழ்கின்றன. அவை பற்றிப் பின்பு காணலாம். வைணர்களும் வேதாந்த வைதீகரும் அவ்வாறே பல நூல்களை உரைநடையில் எழுதினர். இவையனைத்தும் வடமொழிச் சொற்களை அதிகம் பெற்றுள்ளன. வரவர அதன் அளவு குறைந்துள்ளமையினையும் அறிகிறோம். இவ்வாறு சமயத்துறையும் சென்ற நூற்றண்டின் தமிழ் உரைநடையை வளர்த்தது.

இலக்கியம்

இலக்கியமும் அதன் வளர்ச்சியும் உரைநடைக்குத் தொண்டாற்றிய தறிவோம். பல பாட நூல்கள் உரை நடை அல்லது வசனத்தில் எமுதப் பெற்றன. பலவற்றிற்கு உரைகளும் இந்த நூற்றண்டில் எழுதினவர் பல்லோர். சொற்களுக்கும், தொடர்களுக்கும் நூற்பாவிற்கும் பேருரைகள் எழுதிக் குவித்த காலம் இந்தப் பத்தொன்பதாம் நூற்றாண்டேயாம். இவற்றை யன்றி, மேலை நாட்டினர் சார்பால் அறிவியல் வளர வளர அவற்றின் வழி வெளிவந்த ஆங்கிலம் முதலிய மொழிகளில் வரும் நூல்களை மொழி பெயர்த்தோ, விளக்கியோ, சுருக்கியோ பலப்பல உரைநடை நூல்கள் வெளிவந்தன. பல மேலை நாட்டு இலக்கியங்களையும் இலக்கிய வளம் செறிந்த நாடகம் முதலியவற்றையும் தழுவியும் தொட்டும், ஏற்றும் குறைத்தும் பல்வேறு உரை நடை நூல்களும் வெளிவந்தன. தமிழ் நாட்டு மருத்துவம், சோதிடம் முதலிய பல்வேறு கலைகள் பற்றியும் பல நூல்கள் மக்கள் முன் வைக்கப்பெற்றன. பொதுவாகச் சமயம், இலக்கியம், கலை, வாழ்வியல், மொழி, அரசியல் முதலிய எல்லாத் துறை