பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/76

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
73

இங்கிலீசு துரைத்தனத்தின் சிநேகிதரும் படைத் துணைவருமாகிய தஞ்சாவூர் சீர்மை மகாராசா சத்திரபதி சரபோசி மகாராசா அவர்கள் இந்த உப்பரிகையை கட்டி வைத்தார்கள்.

-சகம் ௬௭௱௩௪சுஎாங்ச 1814)
(தமிழ்ப் பொழில், குரோதி-ஆடி 1964)


இவ்வாறு எழுதப்பெற்ற தமிழ் உரைநடை, இலக்கிய வளம் பெற்றது அன்று என்றாலும், மக்கள் தம் கருத்தை ஓலையிலும் கல்லிலும் வடித்துக் காட்டவும் விளக்கிச் சொல்லவும் நன்கு பயன்பட்டது என்பதைக்காண முடிகின்றது. நான் முதலிலே சொல்லியபடி இன்று இத்தகைய பொது மக்கள் இலக்கியமாகிய உரைநடையே நம் ஆய்வுக்குக் கொள்ளப் பெறுகின்றது. இவர்கள் உரைநடை இலக்கியத்தில் பல சொற்கள் புரியா நிலையிலும் உள்ளன. சில ஆங்கிலச் சொற்கள் அவ்வவ்வாறே தமிழில் எழுதப் பெற்றுள்ளன. சில பெயர்களும் வினை முடிபுகளும் மிகக் கொச்சையாகவே வழங்கப் பெறுகின்றன. சில மெய் எழுத்துக்கள் புள்ளி பெறவும் இல்லை. எனினும் இவற்றால் மக்கள் தங்கள் கருத்தைத் தாராளமாகப் பரிமாறிக்கொண்டார்கள் என்பது தெளிவு.

1844-இல் பாளையங்கோட்டை நெல்லை நெடுஞ்சாலையில் தாமிர வருணி ஆற்றுக்குக் கட்டப்பட்ட பாலத்தைப் பற்றிய குறிப்புத் தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ளது. தமிழ்க்குறிப்பு இதுவாகும். இஃது ஒரு கருங்கல் தம்பத்தில் பொறிக்கப் பெற்றுள்ளது.

இஃது தேசவுபகாரியாகிய திருநெல்வேலிச் சில்லா நாயிபு சிரேஸ் ஸ்ரீ சுலோசன முதலியாரவர்கள் முகுந்த உதாரமாய்ச் சொந்தச் சிலவு செய்து இதற்கடுத்த பாலத்தையும் அதைச் சேருகிற வழிகளையும் உண்டு பண்ணின தருமத்தை ஞாபகம் படுத்துவதற்கு இஸ்திந்தியா கும்பினியை நடத்து

5