பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
75

தியாசாலையை ஸ்தாபித்தார்கள். இதுதான் ‘Old College’ எனப்பட்ட இடம். இதில் இப்போது வித்தியாசாலைத் தலைவராகிய ‘Director’ தமது கச்சேரியை வைத்து நடத்தி வருகிறார். இதில் முதல் அங்கிலேயருக்குத் தமிழ் உபாத்தியாயராக நியமிக்கப்பட்டவர் செங்கற்பட்டுத் தாண்டவராய முதலியார். இவர் அக்காலத்தில் பட்டணத்தில் விஜயம் செய்து, நன்னூலுக்குக் காண்டிகை உரை யியற்றின இராமானுஜக் கவிராயரின் சீஷனும், கற்றுச் சொல்லியுமாயிருந்து, மேற்படி கவிராயரிடம் நன்னூற்பாடம் கேட்டவர். இவர் மூலமாய்த்தான் அங்கிலேயர் நன்னூல் சிறந்த தமிழ் இலக்கணம் எனத் தெரிந்து கொண்டது மன்றி, சர்வகலாசாலைப் பரிஷைகட்கும் (University Examinations) இந் நன்னூலே நல்ல இலக்கணம் என விதிக்கவும் தலைப்பட்டது.

இத் தாண்டவராய முதலியாரே வாசக புஸ்தகம் (Prose) அங்கிலேய மாணாக்கருக்கு வேண்டியதாயிருந்த பொழுது, ஹிதோபதேசத்தைச் சமஸ்கிருதத்தினின்று மொழிப் பெயர்த்துப் பஞ்ச தந்திரம் என்ற புஸ்தகம் உண்டு பண்ணிக் கொடுத்தவர். நன்னூலிலுள்ள புணர்ச்சி விதிகள் புலப்படத்தக்கதாய் அப்புஸ்தகத்தைக் கொடும் புணர்ப்பா யெழுதிவிட்டார். இவர் செங்கற்பட்டில் சதுரமீனாக உத்தியோகஞ் செய்து அங்கிலேயரால் நன்கொடை பலவும் பெற்று, தேக வியோகமானார். இவருடைய குமாரன் கிறிஸ்தவராகப் பட்டணத்திலிருக்கிறார்.

ஐரோப்பிய குருமாரும் இந் நன்னூலையே விசேஷமெனப் போற்றியதால் இதற்கு இங்கிலீஷ் உரை சங். பிரதர்ட்டன் ஐயர் அவர்களாலும் (Rev. Brotherton M.A., Cambridge), உவால்ற்றர்