பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
76

ஜாயிஸ் துரையாலும் (Mr. Walter Joyes). கனம் பவர் ஐயராலும் (Rev. H. Bower. D.D), டவுடன் காலேஜ் (Doveton College) மினிஷியாகிய சாமுவேல் பிள்ளையாலும் எழுதப்பட்டது. இந்நன்னுால் சாஸ்திர யுக்கத்தைப் புகழ்ந்து கனம். பவர் ஐயரவர்கள் ஒரு புஸ்தகம் எழுதியிருக்கிறார்கள். இவர்களை மேற் கோளாகக் கொண்டுதான் கனம் ஜான் லாசரு ஐயரவர்கள் (Rev. John Lazrrus B.A.) நன்னூல் இலக்கணம் முதலியன எழுதி அச்சியற்றியது.

ஆகவே நன்னூல் விசேஷமென்று, அதை விரித்து விளக்கியும் சுருக்கித் தீட்டியும் பலரும் சால்பு நூல்கள் பலவும் செய்ய ஆரம்பித்தனர். கனம் போப்பையரவர்கள் (Dr. G. U. Pope) மாத்திரம் நன்னூலிலும் விசேஷ நூல் தமிழிலக் கணத்துக் குண்டெனத் தெரிந்து, பல இலக்கணங்களையும் ஆராய்ந்து, தமது போங்காய் மூன்றாம் இலக்கணம் (Pope's Third Grammar) ஒன்றியற்றி, அதில் யாப்பருங்கலம், குவலயானந்தம், இலக்கணக் கொத்து முதலிய பல நூல்களினின்றும் சிறிது சிறிதெடுத்துக் கூறியிருக்கிறார்.

பட்டணத்தில் தட்டார் குல திலகராய்ப் பிறந்து, அநேக வருஷங்களாய்த் திருச்சிராப்பள்ளியில் தமிழ் கற்பித்து வந்த முத்துவீரக் கவிராயர், முதல் யாப்பிலக்கணம் சூத்திரப்பாவில் இயற்றி அச்சிட்டார். பின் பஞ்ச விலக்கணங்களையும் சவிஸ்தாரமாய்ச் சூத்திரப்பாவில், சுயமாய் எழுதி அச்சியற்றும் சமையத்துத் தேகவியோகமானர். இவர் தொல்காப்பியம், அகத்தியம், இலக்கண விளக்கம் என்ற நூல்களின் சூத்திரங்களைக் கோத்து, உரையில் காண்பவற்றைச் சுயமான சூத்திரங்களைக் கொண்டு காண்பித்து, அரும்