பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
78

துள்ளனர். ஆங்கிலேயரைச் சாராது வாழ்தலே பெருமையுடையதென அக்காலத்தில் கருதப்பட்டதென்பதை அறிகிறோம். ஆங்கிலேயரைச் சாராது உரிமையோடு தமிழ்த் தொண்டு செய்து வாழ்ந்த பெரியவர்களைச் ‘சிங்க’ங்களெனவே அவர் அழைக்கிறார்.

ஆங்கில அரசு தமிழ் நாட்டில் பிரபல்யமாயிருக்கும் போது, ஆங்கிலேயரால் நன்கு மதிக்கப்பட்டுவந்த தமிழ்ப்பண்டிதர்கள் இராமாநுஜக்கவிராயர், விசாகப் பெருமாளையர், தாண்டவராய முதலியார், அ. சபாபதி முதலியார், அ. வீராசாமி செட்டியார், வேலாயுத முதலியார், சரவணப் பெருமாளையர்.

ஆங்கிலேயரை அடுத்துறவாடாதிருந்த தமிழ் சிங்கங்கள் நல்லூர் ஆறுமுக நாவலர், மாயவரம் மீட்னாசி சுந்தரம் பிள்ளை, வடலூர் இராமலிங்கப் பரதேசியார், திரிசிரபுரம் முத்துவீரக் கவிராயர். இவர்கள் கொஞ்ச காலத்துக்கு முன்தான்[1] காலவி யோகமானர்கள். இச்சிங்கங்களிடம் கற்றுச் சொல்லிகளாயிருந்தவர்கள் இப்போது கலாசாலைகளில் தமிழ் முன்ஷிகளாக விருக்கிறார்கள்.

இவ்வாறு அக்காலப் புலவர்கள் பாராட்டப் பெறுகிறர்கள். இவர்களுள் பெரும்பாலோர் தமிழ் உரைநடையை வளம்படுத்தியவர்களே. எனவே இவர் தம் உரைநடைச் சிறப்புகளை இன்றும் நாளையும் காணலாம். ஆங்கிலேயருக்காக அமைக்கப்பட்ட சங்கமே சென்னைக் கல்விச் சங்கமாகும்.

ஊர் வரலாறுகள்

மெக்கன்சி துரை அவர்கள் பலவிடங்களுக்கு நேரில் சென்று கண்டவைப்பற்றி மேலேயறிந்தோம். அவற்றுள்

பெரும்பாலானவை அவ்வப் பகுதி பற்றிய கதைகளும்


  1. 1893 க்கு முள்.