பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
79

வரலாறும் முதலியனவுமேயாம். சிலவற்றை மக்களே எழுதிக் கொடுத்தார்கள். சிலவற்றை நேரில் சொல்ல அதிகாரிகள் குறித்துக் கொண்டார்கள். ஒன்று காண்போம்.

கேவை மாவட்டத்து அந்தியூர் தாலுக்காவைச் சேர்ந்த வரதநல்லூர் கிராம மக்கள் அவ்வூரின் பழையவரலாற்றினை “மெக்கன்ஸி' துரைக்கு நேரில் சொன்னது ஒன்று. இது அவர் தொகுப்பில் சிதையாது உள்ளது. தொடக்கமும் முடிவும் மட்டும் ஈண்டுக் குறிக்கின்றேன்.

௲௮௱௭௵ (1807) ஏப்ரல்௴ ௰௯௨ மேஜர் கர்னல் மெக்கன்ஸி சாகிபு அவர்கள் சர்க்காருக்குக் கோயமுத்தூர் ஜில்லா அந்தியூர் தாலுக்காவிற் சேர்ந்த அக்ரகாரம் ஒபனி 'பாவாணிகூடல்’ மிட்டர் பயிசிமவுசே ‘வரதநல்லூர்’ அக்கிரகாரம் மகா ஜனங்கள் எழுதிக்கொடுத்த ‘கைபீயத்து’ என்னவென்றால்:—

பூருவத்தில் சாலிவாகன சகாப்தம் ௲ ௱ (1100). வருஷத்துக்குமேல் ஊராட்சிக்கோட்டை கிராமத்துக்குச் சேர்ந்தது ‘அல்லப்பச் செட்டி’ பாளையம் என்று ஒரு பேட்டையிருந்தது. ௸ பேட்டைப் பாளையக்கார ராஜிகத்தில் காலியாய்ப் போயிற்று.

அப்புறம் சகாப்தம் ௲௩௱ காளயுத்தி வருஷ்ம் தேவராய மகராய மேற்படி அல்லப்பச் செட்டி பாளையத்தில் அல்லாளப்பட்டர். சங்கம பட்டர் வகையரா பிராமணர்களுக்கு அக்கிரகாரமும் கட்டு வித்துக் கொடுத்து ‘சோமக்கிரஹன’ புண்ணிய காலத்தில் மேற்படி பிராமணர்களுக்கு முப்பத்து நாலு பங்கும் தானம் பண்ணிச் சிவப்பிரதிஷ்டையும் பண்ணுவித்துக் கொடுத்தார்.அது முதல் வெகுதானிய வருஷம் வரையில் நிருபாதிக சருவ மானியமாய் நடந்து வந்தது.