பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6

மூன்றாம் நாளில் மொழி, இலக்கியம், சமயம் ஆகிய நெறிகளில் உரைநடை வளர்ந்த வகையினைக் காட்டினேன். இவ்வாறு இயன்றவகையில் சென்ற நூற்றண்டின் உரை நடை வளர்ச்சியினை ஓரளவு காட்டியுள்ளேன். இவற்றை ஆராயும்போது அரசாங்கமும் தமிழ் நாட்டுப் பல்கலைக் கழகங்களும் இத்துறையில் ஆய்வு காணத் தனித்த அமைப்புக்களை நிறுவின், நாட்டுக்கும் மொழிக்கும் நல்ல அரணும் ஆக்கமும் உண்டாக்கும் என நினைத்தேன். ஆனால் அந்த நினைவைச் செயலாற்றுவது என்னல் முடியாத ஒன்றல்லவா! வல்லார் வழி காண்பாராக!


இப்பணியில் ஊக்கிய சென்னைப் பல்கலைக்கழகத்தாருக்கும் இந்நூலுக்கு முன்னுரை தந்து சிறப்பித்த நம் தமிழக முதலமைச்சர் உயர்திரு மீ. பக்தவத்சலம் அவர்களுக்கும் என் நன்றியையும் வணக்கத்தையும் .தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

தமிழ்க்கலை இல்லம்:
சென்னை-30
25—2—66

பணிவுள்ள,
அ. மு. பரமசிவானந்தம்