பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

é6aᏝ காதலுக்கு நுழைவாயில் நான்தான் இடையுடுக்கைக். கலிங்கத்துப் பரணிக்கும் கடைதிறப்பு நானேதான். வதனக் குளத்தில் வாடி உதிராமல் புதுமையுடன் நாள்தோறும் பூக்கும்செந் தாமரைநான். முகத்து விளக்குநான் ; மோதிக் குதித்துவரும் அகத்து நடிகரெல்லாம் ஆடும் திரைப்படம்ான். கச்சிஞர்க் கினியனும் காவால் உரைப்பதற்கே அச்சப்படுங் கருத்தை ஆழமாய், ஆடவர்க்கோர் வீச்சால் உரைக்கும் விருத்தியுரை காரிகான். கொன்று உயிர்கொடுக்கும் குளிர்ந்தசஞ் சீவிகான் கண்சண்டைக் காரியென்று கடிந்தென்னை இகழ்ந்தாலும் என்சண்டை எப்போதும் இன்பத்தில் தான்முடியும். இரவல் அழகுக் கேங்குபவள் கானல்லேன் இயற்கை அழகின் இருப்பிடம் நான் ; பிறபொறிகள் பொன்னகை பூட்டிப் போட்டியிட வந்தாலும் என்னகை முன்ஞல் எடுபடுமா அவரழகு? 1 02 பனித்துளிகள்