பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பு கார் கடியலூர் உருத்திரங் கண்ணஞர் தமதுநாக்கு அடிகளால் அளந்த அலைப்பட் டினத்தைப் புகார் நகர் என்று புகல்வது பொருத்தமே காவிரிப் பெண்ணும் வங்கக் கடலும் கடற்கரைக் காதல் நடத்துவது கண்ட நகர மக்களின் நாக்குப் புகாரும், பொன்னிறப் பூங்கொடி கண்ணகி யாளின் படுக்கையைக் கண்ணிர்ப் படுகையாய் மாற்றி மாதவிப் பூவின் தாதினைக் கிளறும் கோவலன் பற்றிய கொடிய புகாரும், மருமகள் கண்ணகி மூக்கி லிருந்து வருமூச் செல்லாம் பெருமூச் சென்று மாசாத்து வான்செட்டி கூறும் புகாரும். கோவலன் என்னும் கொம்பு முறிந்தது : படிகளைத் தாண்டாப் பத்தினிக் கன்றிக் கொடிகளுக் கேது விதவைத் தன்மை ? அடுத்தவோர் கொம்பை அணைக்க மறுத்துப் படுத்துக் கிடப்பதேன் மாதவிப் பூங்கொடி ?” 108 பனித்துளிகள்