பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாகைத்தும் சிரித்தும் நகர மக்கள் பகலையும் இரவையும் பறக்க வைத்தனர். வானக் கூரையின் வயிற்றைக் கிழிக்கும் இமயக் குடுமியில் புலியைப் பொறித்து, வாளைச் சுழற்றி வடபுலத் தாரின் சிண்டைப் பிடித்தே ஆட்டிய மல்லர்கள் கண்டைப் பிடித்தும் ஆட்டி மகிழ்ந்தனர். மணியிழைப் பவரை, அம்மணி குடைந்து பணிபுரி பவரை இங்குக் காணலாம். கன்னம் விற்பவர் தெருக்களில் நுழைந்து வண்ணம் விற்பவர் வலம்வரக் காணலாம். களிமயிற் ருேகைக் காரிகை யார்கள் எலிமயிர்க் கம்பளம் இங்கே நெய்தனர். நெய்தல் நிலத்தில் இந்நகர் இருப்பினும் கருப்பு வில்லைக் கையில் எடுத்து நெருப்பு நாடகம் நிகழ்த்தும் காமனின் கணம யக்கமும் சவிதையில் காணும் திணைம யக்கமும் இங்கே காணலாம். கறங்கும் வட்டக் கால்தே ரோட்டம் சென்ற வழியில் அன்றையப் பெண்கள் இரங்கும் நெய்தற் காட்சி யோடு புணர்தலும் புணர்தல் நிமித்தமும் இந்தப் புகார்ங்கர்க் கரையில் நிகழ்வ துண்டு. புகார் 1 1 ||