பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 அந்தநாள் ஆண்ட அரசன்செங் குட்டுவன் சோழனையும் வேளிரையும் பாண்டிய மன்னனையும் கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனையும் வேற்றுகாட் டவரான நூற்றுவர் கன்னரையும் ஓர்மேடை யில்ஏற்றி உள்ளன் புடன் எனக்குப் பார்புகழ விழாவெடுத்தான். இங்ாாள் குட்டுவனே, ஆயிரத் தெண்னுாறு ஆண்டு கழிந்தபின்னர் கடல்கொண்ட புகாரைக் கலப்பொருளால் புதுப்பித்துப் பிரிந்து சென்றவர்கள் மீண்டுமோர் மேடையிலே அறிந்து பழக அரியதோர் விழாவெடுத்தான். முறுக்கிய மீசையுடன் சேரன்செங் குட்டுவன் சிரிப்பு முகமெனக்குத் தெரிகிறது என்முகத்தைச் பனித்துளிகள்