பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞரின் கடைதிறப்பைப் பற்றி ... குயில் (பாவேந்தர் நினைவிதழ்), 1.4.70 கவிதையுலகில் புதுப்புது மாறுதல்கள், புரட்சி எண் ணங்கள் புதுக்கி மின்னிக்கொண்டிருக்கின்றன. தமக்கெனச் சிலர் தனியானதோர் நடையினை ஏற்படுத்திக் கவிதையுல கினைச் சிறக்கச் செய்கின்றனர். அத்தகு வரிசையிலே கடை திறப்பும் ஒன்று கவிஞரின் முயற்சி புதுமுயற்சி எனினும், புரட்சி முயற்சியாகும. பு து ைம இலக்கியங்கள் தமிழில் தோன்றுவதற்குரிய வரிசையை நினைவுபடுத்துகிறது. கடை திறப்பு. முரசொலி, 30-7-69 இதுவரை கவிதை விமரிசனம் செய்த மற்றைய கவிதை நூல்களுக்கும் இதற்கும் முற்றிலும் வேறுபாடுண்டு. ஏனைய நூல்களைப்போல் ஏதோ எ ழு த வேண்டும் என்பதற்காக எழுதப் பட்ட நூலன்று இந்நூல். ஒப்புயர்வற்ற கருத்துச் செறிவும் கற்பனை நயமும் நிறைந்த நன்னூல் கடைதிறப்பு ......இதைப் போன்ற தரம் வாய்ந்த கவிதை நூல்கள் சில ஆண்டுகட்கு ஒரு முறைதான் வருகின்றன. தமிழ்ப் பற்று டையோர், இலக்கியம் வளரவேண்டுமென்று நினைப்போர் கட்டாயம் படித்து இன்புற வேண்டிய நூல் கடைதிறப்பு. $44 பணித்துளிகள்