பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆவ லுடன்சமைத்து

  ஆறவைத்த நல்லுணவைக்

காவல்நாய் கவ்வுவதைக்

  கண்ட அவளண்ணன்

கொன்று குவிக்கக்

  கொலைவாளைத் தூக்கினான்;

நின்றான்;சிறிது

  நிதானித்தான்; தந்தையிடம் "பேரேட்டுப் பூச்சியென்று
  பேசா திருந்துவிட்டோம்; தேரோட்டக் காதல் -
  நடத்துகிறான் கோதையிடம்!

சேல்விழியாள் வேலப்பர்

  செல்வமகள் என்றறிந்தும் வேல்முனையில் ஏறி
  விளையாட்டாய்க் குந்திவிட்டான்!

தாயில்லாப் பெண்ணென்று

  தட்டி வளர்க்காமல்  

நீரன்றோ வீட்டில்

  நெருப்பை வளர்த்துவிட்டீர்!"

என்று குமுறினான்;

  இதைக்கேட்ட வேலப்பர்   

'நன்று மகனே!

  நடுங்காதே! நாளை

_____________________________ கண்ணிர்த்தவம் 15 _____________________________