பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சின்னச் செடிநட்டாள்;

  சீராட்டி நாள்தோறும்

கன்னத்தில் சேர்த்துக்

  கருமணிபோல் காத்துவந்தாள்.

“ஆவி தளிர்க்க

  அரும்பும் மலர்ச்செடியே ! பாவியெனக் குன்னையன்றிப்
  பாரில் துணையில்லை. என்னுடம்பும் என்னுயிரும்
  என்றன் உயிர்த்துடிப்பும் உன்னையன்றி வேறில்லை;
  உண்மையாய்ச் சொல்லுகிறேன். 

உன்மூச் சறுந்துவிட்டால்

  அக்கணமே இக்கோதை தன்மூச் சறுந்துவிடும்
  சற்றுமிதில் ஐயமில்லை"

என்று புலம்பினாள்;

  எண்ணா தனவெண்ணி

நின்று நடுங்கினாள்;

  நெற்றிக்கு மேல்திரண்ட

மேகக் கருங்கூந்தல்

  மேலே பரப்பிவைத்துப்

பூகம்பப் பேரழுகை

  பொங்கிவரக் கண்ணிர்த்

______________________________ 30 பனித்துளிகள் ______________________________