பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாரை மழைபொழிந்தாள்;

  தன்மார்பில் அச்செடியை 

ஆரத் தழுவி

  அணைத்துத் துடித்தழுதாள்; தீச்சுடர் போலத்
  தளிர்துக் குருதியைப்போல் பூச்செடி மேனியெங்கும்
  பூத்துக் குலுங்கியது.

ஆணிவே ரைக்கறையான்

  அரிக்கக் கொடியொன்று மேனி வதங்கியே
  மெல்லவுயிர் சோர்வதுபோல் நாளாக நாளாகக்
  கோதை ஒளியிழந்தாள்; வேளை தொறும் உண்ண
  விருப்பமவள் கொள்வதில்லை.

பின்னி முடிக்காமல்

  பேச்சுத்தேன் சொட்டாமல் கண்ணுக்கு மையெழுதிக்
  காட்டாமல், எப்போதும் 

தொட்டிக் கருகிலே

  தூங்குவதைப் பெற்றெடுத்த எட்டிக்காய்த் தந்தை
  எரிவிழியால் பார்த்துவிட்டான்.

______________________________ கண்ணீர்த்தவம் 31 ______________________________