பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதவிக் கொடியை மறுமணம் புரிந்த போதவிழ் புன்னை மரத்தி னடியில் இருந்தவோர் அழகிய எழுத்தாணிக் கவிஞன் கருத்தில் குவிந்த கற்பனைச் சரக்கை எழுத்துவன கனத்தில் ஏற்றிக்கொண் டிருந்தான் பிசைந்த சுவைத்தேன் வரிகளைப் பின்னர் இசைகயம் பொருந்த உரக்கப் பாடினன். பொழுது மறைந்ததடி! போடுகின்ற நீர்விதைபோல் விழுகின்ற பனித்துளி புல்லின்மேல் விழுந்த தடி! பரிதி முளைத்தால் பனித்துளிகள் செத்துவிடும், பரிதிமுளைப் பதற்குள் பாவையே வாராயோ! வெள்ளி நிலவு விண்ணில் எழுந்ததடி! அல்லிக் குளத்தெழுந்து அகவிதழை அவிழ்த்ததடி! ஆதவன் வந்தால் அல்லிமுகம் வாடிவிடும் ஆதவன் வருவதற்குள் ஆருயிரே வாராயோ! பணித்துளிகள்