பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 மான்குட்டி துள்ளுதற்கும், சிங்கக் குட்டி மத கரியின் மத்தகத்தைப் பிளப்ப தற்கும் மீன் எட்டிக் குதிப்பதற்கும் பிறழு தற்கும் மெல்லுதடு சுவைத்திட்டால் இனிப்ப தற்கும் கான்மயிலி பசுந்தோகை விரிப்ப தற்கும் கட்டளைகள் பெற்ருற்போல் கம்பன் பிள்ளை பாநூறு பாடுவதற் காண பெற்ருன் பாடல்களின் அணிவகுப்பை கடத்தி வைத்தான். "மெய்யருக்கும் வாசகமோ ! மூவர் பாட்டோ ! மிதக்குமிசை மேகவண்ணக் கண்ணன் நெஞ்சைக் கொய்வதற்குக் கசிந்துருகி ஆழ்வா ரெல்லாம் கொட்டியகண் ணிரருவிப் பாட்டோ ! என்றே ஐயுற்ருர் புலவரெலாம் ; அங்க மெல்லாம் ஆனந்தக் கண்ணுளுர் , இதற்கு முன்னம் எய்தாத இன்பநிலை எய்தி நின்ருர் , இகத்திலே பரங்கண்டோம் கண்டோம் ! என்ருள் பண்டார வண்டுகளின் பாட்டுச் சாவி பட்டவுடன் திறக்கின்ற பூட்டுப் பூக்கள் கொண்டுவந்தாள் கோவேந்தன் கொழுந்து பாட்டுக் கொவ்வொன்ருய் எடுத்தெடுத்து மாலை செய்தாள். பண்டைமுறைப் படிமுதலில் செய்யும் காப்புப் பாடலையும் தன் கணக்கில் பிழையாய்ச் சேர்த்தாள். தண்டைக்கால் சதிமிதிக்கக் குலுங்கி வந்து தமிழ்க்கவிஞன் நெடுமார்பில் மாலை யிட்டாள் பனித்துளிகள்