பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடுகின்ற வளையலுக்கு விடைகொ டுத்தாள் பட்டாளக் கத்திக்குக் கைகொ டுத்தாள் ஓடுகின்ற குதிரையின்மேல் ஊர்ந்து வந்தாள் ஒடிகின்ற மெல்லிடைக்குக் கச்சை தந்தாள் பாடுகின்ற கனிவாய்க்கு முழக்கம் தந்தாள் பழமாகும் மார்புக்குக் கவசம் தந்தாள் ஆடுகின்ற கண்ணுக்குச் சீற்றம் தந்தாள் அந்திகிலா பந்தயத்துக் குதிரை போன்ருள்; 'வெட்டட்டும் கூர்வாள்கள் . பகையை நோக்கி வெடிக்கட்டும் அதிர்வேட்டு ; போர் முழக்கம் எட்டட்டும் கெடுவானை ஈட்டிக் கூட்டம் எதிரிகளின் மார்புக்குள் குடியே றட்டும் கட்டட்டும் மூட்டையினை அவர்கள் ; இல்லை கட்டாரி முத்தத்தைச் சுவைபார்க் கட்டும் பட்டத்தைப் போல்நமது கொடியின் கூட்டம் பறக்கட்டும் கெடுவானில் ' என்று சொன்ஞள். ஓடியது பகைக்கூட்டம் நரிக்கூட் டம்போல் உடைவாளுக் கோய்வுதந்தாள் கன்னி அன்னம் ஆடியது கொடியசைத்து வெற்றி அந்த அரைக்கச்சைப் பச்சைமயில் திரும்பி வந்தாள் தேடிவந்த மன்னனுக்கு ரீம்சே என்னும் திருநகரில் முடிசூட்டி ஆட்சி தந்தாள் காடிவந்த அரியணையில் ஏறி மன்னன் கங்கைக்கு முன்கையில் முத்தம் தந்தான். 60 பனித்துளிகள்