பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 "ஆறுறுப்புப் பெற்றுவரும் கலிப்பாப் போல அறுசுவையூண் எமக்களித்தான் ; விறலி யர்க்கு நூறுவகை அணிகொடுத்தான் ஆடை யென்னும் நூல்கயத்தைப் பொன்னிழைத்துக் கொடுத்தான் : மேகம் ஆறுகுளம் ஏரிகடல் நிரப்பு தல்போல் அனைவர்க்கும் அள்ளியள்ளிக் கொடுத்தான் ; வாழை, தாறுகளைச் சுமப்பதுபோல், பரிசு தூக்கித் தள்ளாடிப் பாணரெல்லாம் கடக்கின் ருக்கள். "எட்டுக்காற் பூச்சியைப்போல், நடுவில் நீலம் இழைத்திருக்கும் பொற்பூவைத் தலையில் சூடித் தொட்டுப்ப்ார் தொட்டுப்பார் என்று கண்ணுல் துணைவர்களை விறலியர்கள் அழைக்கின் ருர்கள். கொட்டைப்பாக் களவுள்ள வைரக் கற்கள் குயிற்றிவைத்த கணையாழி புலவர்க் கெல்லாம் தட்டின்றிக் கிடைப்பதளுல் தடவிக் கொண்டே தம்பாட்டை அவரெல்லாம் மறக்கின் ருர்கள். "குலுங்குகின்ற விளம்பரப்பூக் காட்டி, காயே கொடுக்காத பாதிரிபோல் பலபேர் உள்ளார் , விளப்பரப்பூ இல்லாமல் பழங்கொ டுக்கும் வேர்ப்பலா வள்ளலிந்தப் பேகன், மேகம் முழங்குவதைக் கண்டாடும் மயிலைக் கண்டு முகம்வருந்தி கடுங்குவதாய் எண்ணிப் போர்வை வழங்கியதைக் கண்ணுரக் கண்டேன்' என்று வாயார அவன்புகழைப் பரணர் சொன்னர்; பனித்துளிகள்