பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்பூதன் எழுந்திருந்தான் அவையில் சங்கப் பெரும்புலவர் நடுவிலவன் பூத வாதி : இரும்புள்ளங் தனைப்பெற்ருேன் , பெரியார் போல ஏன்? என்று கேட்கின்ற கேள்விச் சிங்கம். பெரும்பேச்சுப் புலவரெல்லாம் இவன் இடுக்கிப் பிடிக்குள்ளே தவிப்பார்கள் இன்று சும்மா இருக்காமல் ஏனெழுந்தான் பூதன் ? என்றே எல்லாரும் விழித்தார்கள். பூதன் கேட்டான் : 'அரிவாள்போல் அவரைக்காய்க் கூட்டைச் சாமை அரிசியுடன் கலந்துண்ணும் பாணர்க்(கு) ஆட்டுப் பொரியலுடன் உணவளித்த தாலோ, செம்பொன் பொற்கிழிகள் புலவர்க்குக் கொடுத்த தாலோ, பெருமைவரும் என்ருநீர் எண்ணு கின்றீர்? பெருமையெல்லாம் அச்சோறு நம்வ யிற்றில் செரிக்கின்ற வரையில்தான் கொடுத்த செம்பொன் செலவழிந்தால் பேகனைநாம் கினைப்ப துண்டா ? " நாட்டியத்து மயிலுக்கும் குளிரி ளுலே கடுங்குகின்ற மயிலுக்கு வேறு பாடு காட்டுக்குள் அறியாத வேந்தன், காட்டுக் கடமைகளை எவ்வாறு புரிந்து கொள்வான் ? வேட்டுக்கும் தும்மலுக்கும் வேறு பாடு விளங்காதா ? வெண்டளைகள் விரவு கின்ற பாட்டெல்லாம் வெண்பாவா ? காலங் காட்டு பவையெல்லாம் இடைநிலையா ? பாட்டு வேங்தே ! போர்வை 65 usufi-5