பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களையும் தாங்கிக்கொண்டிருக்கும் கிளைகளால் 'ஒல்லைவா’ என அழைப்பதோடு ஓவிய நிழலையும் விரித்து சேலம் மாங்கனிகளை உண்ணத் தருகிறது இந்தச் சுந்தர மரம். SA S ASAA MAAA AAAA AAAA AAAA AAAA ASAS A SAS SSAS மனத்தின் ஆழ்ந்தகன்ற அசைவுகளைச் சொல்லில் சுமந்துகாட்டும் சுரதாவின் ஜொலிப்புகள் சுந்தரத்திட மும் மின்னுகின்றன. எல்லைக்குள் ஒடுகின்ற ஒட்டத்தி னுடைய வ லி ைம எழுச்சியோடு அதிகரிப்பதுபோல, இந்த நூலின் கவிதைகள் எல்லையோடிணைந்து பிறந்த தளுல் மனத்தைக் கவர் கின்றன. உருவத்தோடுவரும் ஒலிதானே உவகையைத் தரும். கருத்துக் கருக்கொண்ட கற்பனைகளும், சந்தச் செறிவுகளும், சொல்நயங்களும், புதிய உவமைகளும், புன்னகை வரிகளும் முருகுசுந்தரம் கவிதைகளில் 'இதோ! இதோ!' என முரசொலிக்கின் றன. அடிக்கு அடி நடனத்தின் நளினத்தை வெளிப்படுத் தும் தங்கையைப்போல் இவரின் பாடல்களும் அடிக்கு அடி கவிதை நாகரிகத்தோடு நடனமிடுகின்றன. கவிதை என்பது உணர்ச்சி உதடுகள் உச்சரிக்கும் காதல் மொழி. இன்று சிலர் எழுதும் கவிதைகளைப் படிக்கும்போது, ஒர் ஆங்கிலப் பெண்ணிடமோ உருதுப் .ெ ப ன ன ட மோ, மலேயாளப் பெண்ணிடமோ, உறவாடுவதைப் போன்ற உணர்வுதான் தோன்றுகிறது. அவர்கள் உறவில் ஏதோ மயக்கம் இருக்கிறது என்பது உண்மைதான். ஆளுல் அவர்களின் உள்ளத்து உணர்வு களை ந ம் மா ல் முழுமையாகப் புரிந்துகொள்ள முடி கிறதா? கவிஞர் முருகுவின் கவிதை, நம் சொத்த அத்தை மகள் எதிரில் நின்று பேசு வ து போல் இருக்கிறது. காவியங்கள் அதிகம் காணப்படாத கு ைற ைய இவரின் கண்ணிர்த்தவம் போக்குகிறது. தோன்ருத