பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புன்குமரம் நெற்பொரியைப் போன்று சின்னப் பூவுதிர்க்கும் இளவேனிற் பருவங் தன்னில் இன்னிசையை வாரியிறைக் கின்ற செங்கண் இளங்குயிலே என்றுசொன்னேன்; பளிங்குக் கன்னப் புன் ைகைக்கு மூடுவிழா செய்தாள் உள்ளம் புண்பட்டாள் ; கானென்ன கறுப்பா ? என்ருள். சின்னவிரல் காரி!உன்றன் பாட்டைப் போலச் சிறுகுயிலும் பாடுதென்றேன் ; ஒட்டிக் கொண்டாள். சோற்றுக்குள் கல்லிருந்தால் உண்ணும் போது சுவைகுன்றும் இதைநீயேன் அறிய வில்லை ? நேற்றுத்தான் கணிதந்தாய் ; கரும்பு தந்தாய் , கிலவெரிக்கும் உன்னுடலின் நெருக்கம் தந்தாய் ! ஆற்ருேரம் கீற்றுதட்டால் முத்தந் தந்தாய் அல்லிப்பூச் சுனைபோலக் குளிர்ச்சி தந்தாய் சேற்றுத்தா மரைப்பூவே ! அணைக்கும் போது சேல்கெண்டை போலின்று குதிக்க லாமா ? பாரதியார் பாடிவைத்த சந்தப் பாட்டே ! பாவேந்தன் பாடுமெண்சீர் விருத்தப் பாட்டே ! ஈரடியால் கடக்கின்ற குறளைப் போல இன்பமெல்லால் தருபவனே மழைக்குப் பின்னே ஏர டிக்க துடிக்கின்ற உழவன் போல என்னுள்ளம் துடிக்கின்றேன் , என்றன் நோயைப் பா, டிரீ ஏட்டிக்குப் போட்டி யாகப் பகர்கின்ருய் குதர்க்கச்சொல் ! என்று சொன்னேன். 70 பனித்துளிகள்