பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைத்த தமிழுக் கியக்கம் கண்ட களித்தமிழ் மன்றக் கட்டடம் தகர்ந்ததே ! பாட்டுத் தமிழால் பழமை நொறுங்க வேட்டுக் கிளப்பிய வீரன் மடிந்தான் முற்றிய மடமை நெற்றுகள் உதிர வெற்றிவாள் ஒச்சிய வீரன் மடிந்தான் ! அவளுேர், கற்பனை சிறந்த கலித்தொகைக் காப்பியம் ! சிற்பம் சிறந்த பல்லவர் கோயில் : காவிய வெள்ளம் கவிழ்க்கும் காவிரி ! பாவியம் தமிழில் படைத்த பட்டடை ! முத்துக் கற்பனை உவமைகள் சிதறித் தத்தி இறங்கும் தமிழ்த்தே னருவி ! புதுத்தமிழ் அரும்பப் புறப்பட்ட தென்றல் ! எதிர்வரும் பகையின் இதயம் கடுங்க அதிரத் தாக்கும் அஞ்சாப் பேரிடி ! கொடுமையின் முன்னர்க் குனியா இமயம் ! பாவேந்தர் மறைவுக்கு இரங்கிப் பாடியது தமிழ்த்தேர் சாய்ந்தது 77