பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூத்த மலர்கள் சிரித்திடும் - அந்தப் பொய்கையில் கின்றதண் ணிரிலே வாத்துகள் நீந்தித் திரிந்தன - மீன்கள் வாலை யசைத்தங்கு மின்னின. ஆத்திகப் பாதிரித் தந்தையும் - தன் அன்புச் சிறுவன நோக்கியே காத்தருள் செய்யும் கடவுளின் - உள்ளக் கருணைச் சிறப்பினைப் பேசினர், 'வாத்தின் அடிகளைப் பாரடா - அதன் வாலின் அசைவினைப் பாரடா ! பூத்த புதுமலர் போலவே - உடல் பூரித் திருப்பதைப் பாரடா ! வாத்தின் அடிகள் துடுப்படா - அதன் வாலின் அசைவு சுக்கானடா ! நீர்த்திரை மேல்செலும் கப்பல்போல் - அது நீங்தித் திரிவதைப் பாரடா ! 'சத்தம் சிறிதுமில் லாமலே - அடி சாய்த்துப் படகென நீந்தியே தத்தும் தவளை யினங்களை - அது தாவிப் பிடிப்பதைப் பாரடா : எத்தனை அற்புதம் ஆண்டவன் - படைப்' பென்று பலப்பல கூறியே சித்தம் களிப்புறப் பேசிஞர் - மகன் சிந்தனை யோடதைக் கேட்டனன். ೩ar-ary 79