பக்கம்:பனித்துளி.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 பனித்துளி

கொண்டு சங்கரனின் மனத்தை அவள் மகிழ்விக்கப் போகிறாள். அவர்கள் மகிழ்ந்தால் என்ன? மகிழாமல் இருந்தால் காமுவுக்கு என்ன? பணமில்லாத ஏழைப் பெண் என்று ஒதுக்கி வைத்த பணக்கார வீட்டுப் பெண்ணுக்கு, பணக்கார வீட்டு மருமகளுக்கு அவள் ரவிக்கை தைத்துக் கொடுக்க வேண்டுமா? கையில் வைத்திருந்த பட்டை லேசாகத் தடவியபடியே காமு யோசிப்பதைப் பார்த்து, ‘என்ன காமு! ஒரே யோசனையில் ஆழ்ந்து விட்டாய்? முடியும்ா இல்லையா? உனக்கு முக்கியமான வேலை இருந்தால் நானே தைத்து விடுகிறேன்!” என்றாள் கமலா.

வருவாய் போதாமல் கஷ்டப்பட்ட காமுவுக்குத் தையல் இயந்திரமும், அதற்குத் தேவையான துணிகளும், புஸ்தகங் களும் கொடுத்து உதவிய கமலாவின் வார்த்தையைத் தட்ட முடியவில்லை. இதென்ன பிரமாதம்! தைத்து விடுகிறேன்” என்று கூறி. துணியை உள்ளே எடுத்துப் போய் வைத்தாள். ஊரில் எத்தனையோ பேர்களுக்குத் துணி தைக்கும் காமுவுக்கு அந்தப் பட்டை மட்டும் பிரத்தியேகமான முறை யில் அழகாக வெட்டித் தைக்க வேண்டும் என்கிற ஆவல் தோன்றியது. மிக உயர்ந்த மாதிரியான் மோஸ்தரில் அதை வெட்டி அழகான ரவிக்கையாக ஒரு மணி நேரத்துக்குள் தைத்து முடித்து விட்டாள். ரவிக்கையை மடித்துக் கையில் எடுத்துக் கொண்டு சமையல் அறையில் ஏதோ வேலையாக - இருந்த தாயிடம் சென்றாள் காமு. பட்டினம் வந்த பிறகு அம்மாவின் குணமும் அநேகமாக மாறி இருந்தது காமுவுக்கு ஆச்சரியமாக இருந்தது. முன்னைப் போல் எடுத்ததற் கெல்லாம் முணுமுணுக்காமல் விசாலாட்சி, தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தாள். கிராமத்தைப்போல் வெளியில் நாள் தவறாமல் அப்பளக் கச்சேரிக்கு அவள் போவதற்கு இங்கே இடம் எதுவும் இல்லை. -

‘அம்மா! இந்த ரவிக்கை நன்றாக இருக்கிறதா சொல்லுங்கள்?’ என்று காமு தன் கையிலிருந்த ரவிக்கை யைத் தாயிடம் காண்பித்தாள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/102&oldid=682197" இலிருந்து மீள்விக்கப்பட்டது