பக்கம்:பனித்துளி.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணித்துளி 101

‘நன்றாக இருக்கிறது. உன் சிவப்பு உடம்புக்கு எடுப்பாக

நன்றாக இருக்கும்” என்று கூறி, மகளின் சிவந்த மேனியை ஆசையுடன் பார்த்தாள் விசாலாட்சி. ==

இதன் விலை என்ன தெரியுமா? கஜம் ஏழு ரூபாயாக் கும் நமக்கு ஒரு ரூபாய் கொடுத்துத் துணி வாங்கவே கஷ்டமாக இருக்கிறதே’ என்று மனம் விட்டுப் பேசிய காமு, இது யாருக்காகத் தைத் திருக்கிறேன் சொல், பார்க்

கலாம்” என்று கேட்டாள்.

யாருக்காகத் தைத்தால் எனக்கு என்ன? நீ போட்டுக் கொண்டு நான் பார்த்து மகிழப் போகிறேனா என்ன? சாதாரண சீட்டியும்,வாயிலும் தான் நீகொடுத்து வைத்தது. நீ படித்து உத்தியோகம் பண்ணி சம்பாதித்து இந்த மாதிரி விலை உசந்த துணிகளை உடுத்திக் கொள்ளும்போது நான் இருக்கமாட்டேன் காமு! எனக்கு என்னவோ வர வர உடம்பு தள்ளவில்லை. உன் அப்பாவின் உடம்பு பட்டினம் வந்த பிறகு தேறி விட்டது. என் உடம்புதான் பலவீனமாகி விட்டது!’ என்று கூறினாள் விசாலாட்சி.

உண்மையும் அதுவே தான். விசாலாட்சியின் உடம்பு மெலிந்து தான் போயிருந்தது. திரண்டு உருண்டிருந்த தோள்கள் மெலிந்து, முழங்கை வரையில் ரவிக்கை தொள தொளவென்று தொங்கியது. முகம் களையிழந்து வெளுத் திருந்தது. பட்டினம் வ்ந்து இரண்டு மாதங்களுக்கெல்லாம் விசாலாட்சி பத்து வயது அதிகமாகத்தோற்றம் அளித்தாள். காமுவுக்குக் கல்யாணமாகவில்லையே’ என்கிற கவலை அவளையும் அறியாமல் அவள் உடலையும், மனத்தையும் அரிக்கத் தொடங்கி இருந்தது. “பெண்கள் படிக்கிறார் களாம். சுயமாகச் சம்பாதிப்பதாம். ஒருவர் தயவு இன்றி வாழ்வதாம்!” என்பவை போன்ற பேச்சுக்களைக் கேட்டு விசாலாட்சி மனதுக்குள் சிரித்திருக்கிறாள். வீடும் விளக்கும், அன்பும் அறமும், இன்பமும், காதலும் ஒன்றோடு ஒன்று இணைந்து காணப்படும் இல்லறத்தை விட இவர்கள்

ப.-7 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/103&oldid=682198" இலிருந்து மீள்விக்கப்பட்டது