பக்கம்:பனித்துளி.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 பனித்துளி

வரையில் வந்தது உண்டா?’ என்று தன் மனத்திலிருந்த ஆத்திரம் பூராவையும் கொட்டித் தீர்த்தாள் மீனாட்சி.

“சிறிசு அம்மா. கொஞ்ச நாளைக்கு அப்புறம் எல்லாம் சரியாகிவிடும்” என்று சம்பகம் கூறியதும், “சிறிசா? இந்த நாளில் கல்யாணமாகிற போதே இருபது வயசு ஆகிவிடு கிறதே! சிறிசாம் சிறிசு! பத்தா பன்னிரண்டா வயசு?’ என்று அவள் பேரில் சீறி விழுந்து விட்டு கூடத்துக்குப்போய் விட்டாள் மீனாட்சி, #

அதற்குப் பிறகு அந்த வீட்டில் பயங்கர அமைதி நிலவ ஆரம்பித்தது. ராத்திரி என்ன சமையல் செய்வது?’ என்று கேட்ட சமையற்கார மாமிக்கு மீனாட்சியிடமிருந்து பதில் ஒன்றும் கிடைக்கவில்லை. “கடைத்தெருவுக்குப் போய் ஏதாவது புடவை பார்த்து வரலாம்’ என்று கூப்பிட்ட ருக்மிணியிடம் கூடப் பேசவில்லை மீனாட்சி. சரியாக மணி ஐந்தே முக்காலுக்கு வாசல் ஹாலில் போட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்து, சங்கரனின் வரவை எதிர் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“எனக்கு நிச்சயதாம்பூலம் மாற்றின. அன்றைக்கே தெரியும்’ என்று சமையற்கார அம்மா மி தலையைப் பலமாக ஆட்டினாள், சம்பதத்தைப் பார்த்து.

  • பாரேன், உன் மாமியார் அதிகம் பேசினால் அவள் தனிக் குடித்தனம் போகாவிட்டால் என் பெயரை மாற்றி வைத்துக் கொள்ளுகிறேன்” என்று ம்ே லும் தன் அபிப்பிராயத்தை ஊர்ஜிதப்படுத்தினாள் அவ6 .
இந்த மாதிரி சுபாவக்கர்ராளோடு அதிக ம் வைத்துக் கொள்ளக்கூடாது மாமி’ என்றாள் சம்பகம்.

, மாலை ஆறு மணிக்கு சங்கரன் காரியாலயத்திலிருந்து விடு வந்தான். வரும்போதே முகமெல்லாம் வாடிப் போயிருந் தது. என்றுமில்லாமல் தெருப் பக்கம் நாற்காலியில் உட்கார்ந்திருந்த தாயைக் கண்டதும், அவன் மனம் திடுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/106&oldid=682201" இலிருந்து மீள்விக்கப்பட்டது