பக்கம்:பனித்துளி.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 பனித்துளி

வருவார். அவரைப் பார்த்து, அவர் எவ்விதம் நடந்து கொள்வார் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டாள் காமு, “ஏறக்குறைய ஒரு வருஷத்துக்கு முன்பு பொன் மணியில் அன்பும், கருணையும் உருவாகப் பேசிய சங்கரனாக இருக்கிறாரோ? இல்லை, பணக்கார மனைவியைப் படைத்த பெருமையால் மாறிப் போய் இருக்கிறாரோ? அதையும் பார்த்துவிட வேண்டும்’ என்ற உறுதியுடன், அன்று போகத்தான் வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டாள். -

மாலை நாலு மணி முதற்கொண்டே தலை வாரிப் பின்னி, பூச்சூட்டிக் கொண்டு அழகிய வாயில் புடவையை உடுத்திக் கொண்டாள் காமு. அவள் கண்களே அழகானவை. மேலும் அவைகளுக்கு.அழகு செய்தது போல் மை தீட்டி பொட்டிட்டுத் தன் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்தாள். மெல்லிய கோடுகள் போட்ட வாயில் ரவிக்கை அவளுக்கு மிகவும் எடுப்பாக இருந்தது. அந்த ரவிக்கையைப் பார்த்ததும் இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்பு நீலாவுக்காக அவள் தைத்துக் கொடுத்த பட்டு ரவிக்கையின் நினைவு வந்தது அவளுக்கு.

அலங்கரித்துக் கொண்டு முடிந்ததும் தாயிடம் சென்று, ‘அம்மா! இன்றைக்கு நான் எங்கே போகிறேன் சொல் பார்க்கலாம்?’ என்று கேட்டாள் காமு.

விசாலாட்சி குழி விழுந்த கண்களால் மகரைப் பார்த் தாள். எழிலோடு யெளவனத்தின் வாயிலில் பூரிப்புடன் நிற்கும் அவளைப் பார்த்ததும் அவள் கண்கல்சில் ஒளி வீசியது.

‘அலங்காரமெல்லாம் I 161) I 95 இருக்கிறதே, : போகிறாயோ? யாராவது சிநேகிதிக்குக் கல்யாண்மாக இருக்கும்’ என்றாள் விசாலாட்சி.

‘இல்லை அம்மா! கமலாவின் வீட்டிற்குப் அங்கே நமக்குத் தெரிந்தவர்கள் வருகிறார்கள், உனக்கு

W

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/114&oldid=682210" இலிருந்து மீள்விக்கப்பட்டது