பக்கம்:பனித்துளி.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகஜமாகப் பேசுவதிலிருந்தும் பழகுவதிலிருந்தும் அவள் பட்டினவாசத்து நாகரிகத்தை அறிந்துக் கொண்டிருக்கிறாள் என்பது சங்கரனுக்குத் தெரிந்து போயிற்று. சிற்றுண்டி சாப்பிட்டு முடிகிறவரைக்கும் சங்கரன் அவளைத் தெரிந்து கொண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை.

எல்லோரும் கை அலம்பிவிட்டுக் கூடத்தில் வந்து உட்கார்ந்தபோது, காமு கொல்லைப் பக்கம் கமலாவுக்கு உதவியாகப் பாத்திரங்களையும், கோப்பைகளையும் அலம்பி ஒழுங்கு படுத்தும் வேலையில் முனைந்தாள். சரசரவென்று பீங்கான் கோப்பைகளை அலம்பி அவள் ஒழுங்கு படுத்துவதே ஒரு அழகாக இருந்தது.

கூடத்தில் நீலா தன் அழகுப் பையைத் திறந்து அதிலிருந்து சிறிது மாவு எடுத்து முகத்துக்கு ஒற்றிக் கொண்டாள். உதடுகளுக்குச் சிவப்புச் சாயத்தை லேசாகத் தடவிக் கொண்டாள். இப்படி வந்த இடம் போன இடம் இல்லாமல் நாகரிகம் முதிர்ந்த பெண்கள் அலங்காரம் பண்ணிக் கொள்வது சிறிது அருவருப்பைத் தரக்கூடிய விஷயம்தான்.

சங்கரன் கூடத்துக்கும், கொல்லைப் பக்கத்துக்கும் இடையில் இருந்த தாழ்வாரத்தில் நின்று காமுவையும், நீலா வையும் மாறி மாறிப் பார்த்தான். “காமு பட்டின வாசத்து நாகரிகத்தைத் தெரிந்து கொண்டாலும் அதற்கு ஒர் அளவு கொடுத்து வைத்திருக்கிறாள். பண்டையப் பண்பாட்டுடன் நவீனத்தின் அழகும் கலந்து அவளிடம் பிரகாசிக்கிறது” என்று எண்ணினான் சங்கரன். களைத்துப் போன தன்மனப் தோழி க ம லா வு க் கா. க உதவும் அவள் பான்மை அவளுடைய பழைய கிராமிய வாழ்வைக் காட்டியது. நாலு பேருடன் சரளமாகப் பழகும் அவள் சுபாவம், புது நாகரிகத்தின் பழக்கத்தைக் காட்டியது.

காமு பாத்திரங்களை அலம்பி முடித்ததும் முகத்தில் அரும்பிய வியர்வையைக் கைகுடடையால் துடைத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/117&oldid=682213" இலிருந்து மீள்விக்கப்பட்டது